88 ஆயிரம் குழந்தைகளுக்கு போலியோ சொட்டு மருந்து 19-ந்தேதி வழங்கப்படுகிறது


88 ஆயிரம் குழந்தைகளுக்கு போலியோ சொட்டு மருந்து 19-ந்தேதி வழங்கப்படுகிறது
x
தினத்தந்தி 8 Jan 2020 5:33 AM IST (Updated: 8 Jan 2020 5:33 AM IST)
t-max-icont-min-icon

புதுவை மாநிலத்தில் 88 ஆயிரம் குழந்தைகளுக்கு வருகிற 19-ந்தேதி போலியோ சொட்டு மருந்து வழங்கப்படுகிறது.

புதுச்சேரி,

மத்திய அரசின் வழிகாட்டுதல்படி நடப்பு ஆண்டுக்கான போலியோ நோய் தடுப்பு சொட்டு மருந்து முகாம் வருகிற 19-ந்தேதி புதுச்சேரி மாநிலத்தில் நடைபெற உள்ளது.

இந்த முகாம்களின் மூலம் புதுவை மாநிலத்தில் 5 வயதுக்குட்பட்ட 88 ஆயிரம் குழந்தைகளுக்கு 452 மையங்களில் போலியோ தடுப்பு சொட்டு மருந்து அளிக்கப்பட உள்ளது. இதற்காக மாநில அளவிலான பயிற்சி கருத்தரங்கு நேற்று நடைபெற்றது.

புதுவை மாநில சுகாதார இயக்க கருத்தரங்க வளாகத்தில் நடந்த இந்த கருத்தரங்கில் சுகாதாரத்துறை இயக்குனர் டாக்டர் மோகன்குமார் கலந்துகொண்டு ஆலோசனைகள் வழங்கினார். நிகழ்ச்சியில் சுகாதாரத்துறை அதிகாரிகள், மேற்பார்வையாளர்கள், ஊழியர்கள் கலந்துகொண்டனர்.
1 More update

Next Story