மாவட்ட செய்திகள்

திருவொற்றியூரில் பணத்தகராறில் முதியவர் கொலை + "||" + In Thiruvotriyur In a money dispute Murder of the old man

திருவொற்றியூரில் பணத்தகராறில் முதியவர் கொலை

திருவொற்றியூரில் பணத்தகராறில் முதியவர் கொலை
பணம் கொடுக்கல், வாங்கல் தகராறில் முதியவர் கொலை செய்யப்பட்டார். இது தொடர்பாக தொழிலாளியை போலீசார் கைது செய்தனர்.
திருவொற்றியூர், 

திருவொற்றியூர் மாட்டுமந்தை மேம்பாலம் அருகே சாலையோரத்தில் வசித்து வந்தவர் கன்னியப்பன்(வயது 78). கூலித்தொழிலாளி. இவருக்கும், அதே பகுதியை சேர்ந்த மாதவன்(55) என்பவருக்கும் கடந்த 2 மாதங்களாக பணம் கொடுக்கல், வாங்கல் தகராறு இருந்து வந்ததாகவும், இது தொடர்பாக இருவரும் அடிக்கடி சண்டைபோட்டு கொண்டதாகவும் தெரிகிறது.

நேற்று முன்தினம் இரவு வழக்கம்போல் இருவருக்கும் தகராறு ஏற்பட்டது. இருவரும் ஒருவரை ஒருவர் தாக்கிக்கொண்டனர். இதில் ஆத்திரம் அடைந்த மாதவன், முதியவர் கன்னியப்பனை திண்ணையில் இருந்து கீழே தள்ளி விட்டதாக கூறப்படுகிறது.

இதில் நிலைதடுமாறி கீழே விழுந்த கன்னியப்பன் தலையில் பலத்த காயம் ஏற்பட்டு சம்பவ இடத்திலேயே பரிதாபமாக இறந்தார். இதைபார்த்து அதிர்ச்சி அடைந்த பொதுமக்கள், திருவொற்றியூர் போலீசாருக்கு தகவல் கொடுத்தனர்.

சம்பவ இடத்துக்கு விரைந்து சென்றபோலீசார், கொலையான கன்னியப்பன் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக ஸ்டான்லி ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். மேலும் இந்த கொலை வழக்கு தொடர்பாக இன்ஸ்பெக்டர் ஆரோக்கியராஜ் வழக்குப்பதிவு செய்து கூலித்தொழிலாளி மாதவனை கைது செய்தார்.

தொடர்புடைய செய்திகள்

1. களியக்காவிளை சோதனை சாவடியில் சப்-இன்ஸ்பெக்டரை கொல்ல பயன்படுத்திய துப்பாக்கி கேரளாவில் மீட்பு
களியக்காவிளை சோதனை சாவடியில் சப்-இன்ஸ்பெக்டரை கொல்ல பயன்படுத்திய துப்பாக்கி கேரளாவில் மீட்கப்பட்டது. பயங்கரவாதிகள் சாக்கடையில் வீசியதை போலீசார் தேடி கண்டுபிடித்தனர்.
2. சிவகாசி அருகே, பாலியல் பலாத்காரம் செய்து சிறுமியை கொன்ற வழக்கில் அசாம் வாலிபர் கைது
சிவகாசி அருகே பாலியல் பலாத்காரம் செய்யப்பட்டு சிறுமி கொலை செய்யப்பட்ட வழக்கில் அசாம் வாலிபர் கைது செய்யப்பட்டார்.
3. 8 வயது சிறுமி கொலை: அசாம் மாநிலத்தைச் சேர்ந்த மஜம் அலி என்பவர் கைது
சிவகாசியில் 8 வயது சிறுமி கொலை செய்யப்பட்டது தொடர்பாக, அசாம் மாநிலத்தை சேர்ந்த மஜம் அலி என்பவரை போலீசார் கைது செய்துள்ளனர்.
4. சப்-இன்ஸ்பெக்டர் கொலை: பயங்கரவாதிகள் 2 பேருக்கும் 10 நாள் போலீஸ் காவல் நாகர்கோவில் கோர்ட்டு உத்தரவு
சப்-இன்ஸ்பெக்டர் கொலையில் கைதான பயங்கரவாதிகள் 2 பேருக்கும் 10 நாள் போலீஸ் காவலுக்கு அனுமதி அளித்த நாகர்கோவில் கோர்ட்டு உத்தரவிட்டது.
5. சப்-இன்ஸ்பெக்டர் சுட்டுக்கொல்லப்பட்ட வழக்கில் கைதான 2 பயங்கரவாதிகள் கோர்ட்டில் ஆஜர்
சப்-இன்ஸ்பெக்டர் சுட்டுக்கொல்லப்பட்ட வழக்கில் கைதான பயங்கரவாதிகள் 2 பேர் நாகர்கோவில் கோர்ட்டில் ஆஜர்படுத்தப்பட்டனர்.