மாவட்ட செய்திகள்

திருவள்ளுவர் தினத்தையொட்டி 16-ந் தேதி டாஸ்மாக் கடைகளுக்கு விடுமுறை - கலெக்டர் சிவன்அருள் தகவல் + "||" + By Thiruvalluvar Day Holidays for Toss Mag shops on the 16th Collector Shiva Arul Information

திருவள்ளுவர் தினத்தையொட்டி 16-ந் தேதி டாஸ்மாக் கடைகளுக்கு விடுமுறை - கலெக்டர் சிவன்அருள் தகவல்

திருவள்ளுவர் தினத்தையொட்டி 16-ந் தேதி டாஸ்மாக் கடைகளுக்கு விடுமுறை - கலெக்டர் சிவன்அருள் தகவல்
திருவள்ளுவர் தினத்தையொட்டி 16-ந் தேதி டாஸ்மாக் கடைகளுக்கு விடுமுறை என்று கலெக்டர் சிவன் அருள் தெரிவித்துள்ளார்.
திருப்பத்தூர், 

திருப்பத்தூர் மாவட்டத்தில் டாஸ்மாக் கட்டுப்பாட்டில் இயங்கி வரும் அனைத்து அரசு டாஸ்மாக் மதுபான சில்லரை விற்பனை கடைகள், மதுபான கடைகளை ஒட்டியுள்ள மதுபான பார்கள், நட்சத்திர அந்தஸ்து ஓட்டலில் உள்ள பார்கள் அனைத்தும் 16-ந் தேதி (வியாழக்கிழமை) திருவள்ளுவர் தினத்தை முன்னிட்டு மூடி வைக்க வேண்டும். அன்று மதுபானங்கள் விற்பனை செய்யக்கூடாது. மதுபானம் விற்பனை செய்வது தெரியவந்தால், சம்பந்தப்பட்ட டாஸ்மாக் மதுபான சில்லரை விற்பனை கடைகளின் மேற்பார்வையாளர்கள், விற்பனையாளர்கள் மீது உரிய குற்றவியல் நடவடிக்கை மேற்கொள்ளப்படும்.

அதேபோல், அன்றைய தினத்தில் டாஸ்மாக் மதுபான கூடங்கள் திறக்கப்பட்டிருந்தாலோ, பார்களில் மதுபானம் விற்பனை செய்வதாக தெரியவந்தாலோ, மதுபான பார் உரிமங்கள் தற்காலிகமாக நிறுத்தி வைத்தல் மற்றும் உரிமங்களை ரத்து செய்தல் போன்ற நடவடிக்கை மேற்கொள்ளப்படும்.

இந்த தகவலை கலெக்டர் சிவன் அருள் தெரிவித்துள்ளார்.

தொடர்புடைய செய்திகள்

1. வாணியம்பாடி வாரச்சந்தை பகுதியில் புதிதாக கட்டப்பட்டு வரும் கடைகள் - கலெக்டர் சிவன்அருள் ஆய்வு
வாணியம்பாடி வாரச்சந்தை பகுதியில் புதிதாக கட்டப்பட்டு வரும் கடைகளை கலெக்டர் சிவன்அருள் ஆய்வு செய்தார்.
2. திருப்பத்தூர் மாவட்டத்தில் டாம்கோ, டாப்செட்கோ கடன் திட்டங்களுக்கான சிறப்பு முகாம் - 4 தாலுகாவில் நடக்கிறது
திருப்பத்தூர் மாவட்டத்தில் டாம்கோ, டாப்செட்கோ கடன் திட்டங்களுக்கான சிறப்பு முகாம் 4 தாலுகாவில் நடக்கிறது என கலெக்டர் சிவன்அருள் தெரிவித்துள்ளார். இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-
3. ஊரடங்கு நாட்களில் சுபநிகழ்ச்சிகளில் 50 பேருக்கு மேல் கூடினால் கடும் நடவடிக்கை - கலெக்டர் சிவன்அருள் எச்சரிக்கை
திருப்பத்தூர் மாவட்ட கலெக்டர் சிவன்அருள் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:-
4. திருப்பத்தூர் மாவட்டத்தில், விநாயகர் சிலைகளை பொது இடங்களில் வைத்து வழிபாடு நடத்த தடை - கலெக்டர் சிவன்அருள் தகவல்
திருப்பத்தூர் மாவட்டத்தில் விநாயகர் சிலைகளை பொது இடங்களில் வைத்து வழிபாடு நடத்த கலெக்டர் சிவன்அருள் தடை விதித்துள்ளார்.
5. சுதந்திர தினவிழவில், திருப்பத்தூர் மாவட்ட கலெக்டர் தேசிய கொடியேற்றினார் - 516 பயனாளிகளுக்கு ரூ.1¼ கோடி நலத்திட்ட உதவிகள்
சுதந்திர தினவிழாவில் திருப்பத்தூர் மாவட்ட கலெக்டர் சிவன்அருள் தேசிய கொடியேற்றினார். விழாவில் 516 பயனாளிகளுக்கு ரூ.1 கோடியே 25 லட்சத்து 13 ஆயிரம் மதிப்பிலான நலத்திட்ட உதவிகளை கலெக்டர் வழங்கினார்.

ஆசிரியரின் தேர்வுகள்...