ஜவ்வாதுமலை அடிவாரத்தில் சந்தனமர வேர்த்துண்டுகளை வெட்டி கடத்திய 2 பேர் கைது


ஜவ்வாதுமலை அடிவாரத்தில் சந்தனமர வேர்த்துண்டுகளை வெட்டி கடத்திய 2 பேர் கைது
x
தினத்தந்தி 14 Jan 2020 4:30 AM IST (Updated: 13 Jan 2020 6:13 PM IST)
t-max-icont-min-icon

திருப்பத்தூர் மாவட்டம், ஜவ்வாதுமலை புதூர்நாடு மலையடிவாரம் மற்றும் மாம்பாக்கம் காப்புக்காட்டு பகுதியில் சந்தனமரங்கள் வளர்க்கப்படுகின்றன. இந்த பகுதிகள் வனத்துறை கட்டுப்பாட்டில் உள்ளது.

திருப்பத்தூர், 

சந்தனமர வேர்களை சிறுதுண்டுகளாக வெட்டி மோட்டார்சைக்கிள்களில் சிலர்  இங்கிருந்து கடத்துவதாக வனத்துறையினருக்கு தகவல்வந்தது.

அதன்பேரில் வனவர் ஏ.சஞ்சீவி தலைமையில் சிறப்பு குழுவினர் அப்பகுதியில் கண்காணிப்பில் ஈடுபட்டனர். அப்போது அந்த வழியாக வந்த மோட்டார்சைக்கிளை மறித்து சோதனையிட்டனர். அதில் சந்தனமர வேர்த்துண்டுகள், சிறு, சிறு குச்சிகளாக கட்டை பையில் இருந்தது.

விசாரணையில், அவர்கள் ஜவ்வாதுமலை நெல்லிவாசல்நாடு மேல்பட்டு கிராமத்தை சேர்ந்த கோபால் மகன் பழனிவேல்முருகன், ராமன் மகன் வேடி என்பது தெரியவந்தது. அதைத் தொடர்ந்து அவர்களிடம் இருந்து சந்தனமர வேர்த்துண்டுகள், குச்சிகளை வனத்துறையினர் பறிமுதல் செய்து இருவரையும் கைது செய்தனர். பின்னர் அவர்களை திருப்பத்தூர் சிறப்பு நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி ஜெயிலில் அடைத்தனர்.

Next Story