மாவட்ட செய்திகள்

சுகாதாரமற்ற உணவு தயார் செய்த ஓட்டல்களுக்கு அபராதம் அதிகாரிகள் நடவடிக்கை + "||" + Fines authorities move for unhealthy food-ready hotels

சுகாதாரமற்ற உணவு தயார் செய்த ஓட்டல்களுக்கு அபராதம் அதிகாரிகள் நடவடிக்கை

சுகாதாரமற்ற உணவு தயார் செய்த ஓட்டல்களுக்கு அபராதம் அதிகாரிகள் நடவடிக்கை
குண்டடம் பகுதியில் சுகாதாரமற்ற முறையில் உணவு தயார் செய்த ஓட்டல்களுக்கு உணவு பாதுகாப்புத்துறை அதிகாரிகள் அபராதம் விதித்தனர்.
திருப்பூர்,

திருப்பூர் மாவட்ட கலெக்டர் விஜயகார்த்திகேயன் உத்தரவின் பேரில், உணவு பாதுகாப்பு பிரிவு நியமன அலுவலர் விஜயலலிதாம்பிகை தலைமையில், உணவு பாதுகாப்பு அலுவலர் கேசவராஜ் மற்றும் அலுவலர்கள் குண்ட டம் பகுதிகளில் 26 கடைகளில் ஆய்வு மேற்கொண்டனர்.


இதில் தடை செய்யப்பட்ட புகையிலை பொருட்களை விற்பனை செய்பவர்கள், சுகாதாரமற்ற முறையில் உணவு தயார் செய்யும் நிறுவனங்கள், ஓட்டல்கள், உணவு விடுதிகள், தள்ளுவண்டி கடைகள், துரித உணவகங்கள், சாலையோர கடைகளில் உணவு பாதுகாப்பு சட்டத்திற்கு முரணாக செயல்பட்டவர்களுக்கு சம்பவ இடத்திலேயே அபராதம் விதிக்கப்பட்டது.

மேலும், இந்த ஆய்வில் புகையிலை பொருட்களை விற்பனைக்கு வைத்திருந்த 4 கடை உரிமையாளர்கள் மீது உணவு பாதுகாப்பு சட்ட பிரிவு 69-ன் கீழ் முதன் முறை குற்றம் என்பதால், ஒவ்வொருவருக்கும் ரூ.5 ஆயிரம் அபராதம் விதிக்கப்பட்டது.

அபராதம்

இதே குற்றத்தை மீண்டும் அவர்கள் செய்தால் ரூ.10 ஆயிரம் அபராதம் விதிக்கப்படும் என உணவு பாதுகாப்புத்துறை அதிகாரிகள் எச்சரிக்கை விடுத்தனர்.

இந்த அபராதத்தொகையை அரசு கருவூலத்தில் செலுத்த நோட்டீஸ் வழங்கப்பட்டுள்ளது. மேலும், 3 நாட்களுக்குள் அபராத தொகையை செலுத்த அறிவுறுத்தப்பட்டுள்ளது.

இந்த ஆய்வின் போது 5 கடைகளில் 2 கிலோ அளவில் பாலித்தீன் பைகள், தயாரிப்பு தேதி குறிப்பிடாத 3 கிலோ தின்பண்டங்கள் பறிமுதல் செய்து அழிக்கப்பட்டது. திருப்பூர் மாவட்டத்தில் கடந்த ஒரு வாரத்தில் 17 இடங்களில் புகையிலை பொருட்கள் விற்பனை செய்வது கண்டறியப்பட்டு அபராதமும் விதிக்கப்பட்டுள்ளது. இந்த சோதனை மாவட்டம் முழுவதும் நடைபெறும் என மாவட்ட நியமன அலுவலர் விஜயலலிதாம்பிகை தெரிவித்தார்.

தொடர்புடைய செய்திகள்

1. கொரடாச்சேரி அருகே, பின்தங்கிய கிராமங்களில் ஆதிதிராவிட மக்களின் கல்வி நிலை குறித்து அதிகாரிகள் ஆய்வு
கொரடாச்சேரி அருகே பின்தங்கிய கிராமங்களில் ஆதிதிராவிட மக்களின் கல்வி நிலை குறித்து அதிகாரிகள் ஆய்வு மேற்கொண்டனர்.
2. அரியலூர் வட்டாரத்தில் மக்காச்சோள பயிரில் படைப்புழு தாக்குதல் கட்டுப்படுத்த அதிகாரிகள் ஆலோசனை
அரியலூர் வட்டாரத்தில் மக்காச்சோள பயிரில் ஏற்பட்டுள்ள படைப்புழு தாக்குதலை கட்டுப்படுத்த அதிகாரிகள் ஆலோசனை வழங்கியுள்ளனர்.
3. கொரோனா நிவாரணம் தொடர்பாக எம்.எல்.ஏ.க்கள் குழு சரமாரி கேள்வி அரசு அதிகாரிகள் திணறல்
கொரோனா நிவாரணம் தொடர்பாக எம்.எல்.ஏ.க்களின் கேள்விகளுக்கு பதில் அளிக்க முடியாமல் அரசு அதிகாரிகள் திணறினார்கள்.
4. மதுரையில் குறைந்து வரும் கொரோனா பாதிப்பு காரணம் என்ன? சுகாதாரத்துறை அதிகாரிகள் விளக்கம்
மதுரையில் கொரோனா பாதிப்பு குறைந்து வருவதற்கான காரணம் என்ன என்பது குறித்து சுகாதாரத்துறை அதிகாரிகள் விளக்கம் அளித்தனர்.
5. நடிகை ரியா சக்ரபோர்த்தி கைது; போதை பொருள் கட்டுப்பாட்டு வாரியம் நடவடிக்கை
நடிகர் சுஷாந்த் சிங் மரண வழக்கில் நடிகை ரியா சக்ரபோர்த்தி போதை பொருள் கட்டுப்பாட்டு வாரிய அதிகாரிகளால் இன்று கைது செய்யப்பட்டு உள்ளார்.

அதிகம் வாசிக்கப்பட்டவை