ஜோலார்பேட்டை அருகே விபத்தில் தொழிலாளி பலி


ஜோலார்பேட்டை அருகே விபத்தில் தொழிலாளி பலி
x
தினத்தந்தி 17 Jan 2020 3:00 AM IST (Updated: 16 Jan 2020 7:36 PM IST)
t-max-icont-min-icon

ஜோலார்பேட்டையை அடுத்த ஒட்டப்பட்டி கிராமத்தை சேர்ந்தவர் விஜய் (வயது 23), கட்டிட தொழிலாளி. இவர் நேற்று முன்தினம் இரவு திருப்பத்தூரில் இருந்து மோட்டார் சைக்கிளில் வீட்டிற்கு புறப்பட்டார்.

ஜோலார்பேட்டை, 

திருப்பத்தூர் –புள்ளானேரி சாலையில் ஒட்டப்பட்டி அருகில் எதிரே வந்த மொபட் மீது மோட்டார் சைக்கிள் நேருக்கு நேர் மோதியது. இதில் தலையில் அடிபட்ட விஜய் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக இறந்தார். மொபட்டை ஓட்டி வந்த பிரபாகரனுக்கு லேசான காயம் ஏற்பட்டது. பின்னால் அமர்ந்திருந்த அவரது மனைவி, குழந்தை காயமின்றி தப்பினர்.

இதுகுறித்து ஜோலார்பேட்டை போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.


Next Story