திருப்பூரில் 540 கிலோ புகையிலை பொருட்கள் காருடன் பறிமுதல் கடத்தி வந்தது யார்? போலீசார் விசாரணை


திருப்பூரில் 540 கிலோ புகையிலை பொருட்கள் காருடன் பறிமுதல் கடத்தி வந்தது யார்? போலீசார் விசாரணை
x
தினத்தந்தி 17 Jan 2020 4:30 AM IST (Updated: 17 Jan 2020 2:41 AM IST)
t-max-icont-min-icon

திருப்பூரில் 540 கிலோ புகையிலை பொருட்கள் காருடன் பறிமுதல் செய்யப்பட்டது. எனவே புகையிலை பொருட்களை கடத்தி வந்தது யார்? என போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.

அனுப்பர்பாளையம்,

திருப்பூர் மாநகரில் அரசால் தடை செய்யப்பட்ட புகையிலை பொருட்கள் விற்பனை செய்வதை தடுக்கவும், விற்பனையில் ஈடுபடுபவர்கள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்குமாறு மாநகர போலீஸ் கமிஷனர் சஞ்சய்குமார் உத்தரவிட்டுள்ளார். அதன்படி துணை கமிஷனர் பத்ரி நாராயணன் மேற்பார்வையில் தனிப்படை அமைக்கப்பட்டுள்ளது. மேலும் மாநகர போலீசார் தீவிர ரோந்து மற்றும் வாகன தணிக்கையில் ஈடுபட்டு வருகின்றனர்.

இந்த நிலையில் அனுப்பர்பாளையம் போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் கிருஷ்ணன் தலைமையில் போலீசார் நெருப்பெரிச்சல் பகுதியில் ரோந்து சுற்றி வந்தனர். அப்போது அங்குள்ள கே.எஸ்.ஆர்.நகர் பகுதியில் நின்று கொண்டிருந்த கார் மீது போலீசாருக்கு சந்தேகம் ஏற்பட்டது. இதையடுத்து போலீசார் அந்த காரை சோதனை செய்தபோது உள்ளே ஏராளமான பண்டல்கள் இருந்தன.

அந்த பண்டல்களை பிரித்து பார்த்த போது அதில் புகையிலை பொருட்கள் இருந்தன. அந்த காரில் மொத்தம் 540 கிலோ புகையிலை பொருட்கள் இருப்பது தெரியவந்தது. இவற்றின் மதிப்பு ரூ.2 லட்ச மாகும். இதையடுத்து அந்த காரையும், புகையிலை பொருட்களையும் போலீசார் பறிமுதல் செய்து போலீஸ் நிலையத்திற்கு கொண்டு வந்தனர்.

போலீசார் விசாரணை

இதுகுறித்து அனுப்பர்பாளையம் போலீசார் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். மேலும் அந்த காரில் புகையிலை பொருட்கள் எப்படி வந் தது? புகையிலை பொருட் களை கடத்தி வந்தது யார்? அந்த காரின் உரிமையாளர் யார்? மற்றும் காரை அங்கு நிறுத்திவிட்டு சென்றது யார்? என்பது குறித்தும் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். புகையிலை பொருட் களை பறிமுதல் செய்த சப்-இன்ஸ்பெக்டர் மற்றும் அவருடன் பணியில் இருந்த போலீசாரை கமிஷனர் பாராட்டினார். 

Next Story