நாகர்கோவிலில் மாவட்ட அளவிலான கூடைப்பந்து போட்டி
நாகர்கோவிலில் மாவட்ட அளவிலான கூடைப்பந்து போட்டி நடந்தது.
நாகர்கோவில்,
குமரி மாவட்ட கூடைப்பந்து கழகம் லயன்கிங் கிளப் சார்பில் மாவட்ட அளவிலான மின்னொளி கூடைப்பந்து போட்டி நாகர்கோவில் வடசேரியில் உள்ள அண்ணா விளையாட்டு அரங்கத்தில் நேற்று முன்தினம் தொடங்கியது. 2-வது நாளாக நேற்றும் போட்டிகள் நடந்தன. இதில் மாவட்டம் முழுவதிலும் இருந்து ஏராளமான அணிகள் கலந்துகொண்டன. போட்டியானது ஆண்கள் மற்றும் பெண்கள் என 2 பிரிவுகளாக நடந்தது. முதல் நாளன்று பல்வேறு அணிகள் மோதிக்கொண்டன.
இந்த நிலையில் ஆக்ரோஷமான இறுதி போட்டிகள் நேற்று நடந்தது. மாலையில் தொடங்கிய போட்டியானது நள்ளிரவு வரை நடைபெற்றது. இதில் ஆண்கள் பிரிவில் முதலிடத்தை நாகர்கோவில் ஏ.சி.என். ஸ்போர்ட்ஸ் அணியும், 2-வது இடத்தை குரும்பனையை சேர்ந்த நோவே அவுட் அணியும் பிடித்தது. 3-வது இடத்தை கடம்மலைக்குன்று எஸ்.ஆர்.சி. அணி பிடித்தது. இதே போல பெண்கள் பிரிவில் முதலிடத்தை நாகர்கோவில் எம்பரர் அணியும், 2-வது இடத்தை ஆல்பா அணியும் பெற்றது.
சுழற்கோப்பை பரிசு
இதைத் தொடர்ந்து நடைபெற்ற பரிசளிப்பு விழாவில் பெற்றி பெற்ற அணிகளுக்கு சுழற்கோப்பை வழங்கப்பட்டது. விழாவில் கூடைப்பந்து கழக நிர்வாகிகள் முத்து, டென்னிசன், நெல்லையப்பன், அய்யப்பன், ஆஸ்டின், மகேஷ், பிரேம் சுந்தர் உள்பட பலர் கலந்துகொண்டனர்.

Related Tags :
Next Story