எல்லைத்தாண்டி மீன்பிடித்ததாக கூறி விசைப்படகு மீனவர்கள் 4 பேர் கைது இலங்கை கடற்படையினர் நடவடிக்கை


எல்லைத்தாண்டி மீன்பிடித்ததாக கூறி விசைப்படகு மீனவர்கள் 4 பேர் கைது இலங்கை கடற்படையினர் நடவடிக்கை
x
தினத்தந்தி 20 Jan 2020 4:30 AM IST (Updated: 19 Jan 2020 10:34 PM IST)
t-max-icont-min-icon

எல்லைத்தாண்டி மீன்பிடித்ததாக கூறி, புதுக்கோட்டை மாவட்ட விசைப்படகு மீனவர்கள் 4 பேரை இலங்கை கடற்படையினர் கைது செய்தனர்.

கோட்டைப்பட்டினம்,

புதுக்கோட்டை மாவட்டம், ஜெகதாப்பட்டினம் பகுதியிலிருந்து நேற்று முன்தினம் 96 விசைப்படகுகளில் 500-க்கும் மேற்பட்ட மீனவர்கள் கடலுக்கு மீன்பிடிக்க சென்றனர்.

இதில் ஜெகதாப்பட்டினம் பகுதியை சேர்ந்த பால்ராஜ் என்பவருக்கு சொந்தமான விசைப்படகில், அதே பகுதியை சேர்ந்த பாரதி (வயது 30), அசோக் (28), சக்திகுமார் (30), மணி (33) ஆகிய 4 மீனவர்களும் கடலுக்கு மீன்பிடிக்க சென்றனர். இந்நிலையில் இவர்கள் இந்திய எல்லையான நெடுந்தீவு அருகே 32 நாட்டிக்கல் மைல் தொலைவில் மீன்பிடித்துக் கொண்டிருந்தனர்.

4 மீனவர்கள் கைது

அப்போது அங்கே ரோந்து படகில் வந்த இலங்கை கடற்படையினர், ஜெகதாப்பட்டினத்தை சேர்ந்த 4 மீனவர்களையும் எல்லைத்தாண்டி மீன்பிடிப்பதாக கூறி, கைது செய்தனர். மேலும் அவர்களது விசைப்படகை கயிறு மூலம் கட்டி இலங்கைக்கு இழுத்து சென்றனர். கைது செய்யப்பட்ட மீனவர்களை காங்கேசன் ராணுவ முகாமில் வைத்து விசாரணை நடத்தி வருகின்றனர். புதுக்கோட்டை மாவட்ட விசைப்படகு மீனவர்கள் 4 பேர் இலங்கை கடற்படையினரால் கைது செய்யப்பட்ட சம்பவம் ஜெகதாப்பட்டினம் பகுதி மீனவர்கள் இடையே சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.

Next Story