மாவட்ட செய்திகள்

மன்னார்குடியில் மோட்டார் சைக்கிள்களை திருடிய 2 பேர் கைது 12 மோட்டார் சைக்கிள்கள் பறிமுதல் + "||" + Two arrested for stealing motorcycles in Mannargudy

மன்னார்குடியில் மோட்டார் சைக்கிள்களை திருடிய 2 பேர் கைது 12 மோட்டார் சைக்கிள்கள் பறிமுதல்

மன்னார்குடியில் மோட்டார் சைக்கிள்களை திருடிய 2 பேர் கைது 12 மோட்டார் சைக்கிள்கள் பறிமுதல்
மன்னார்குடியில் மோட்டார் சைக்கிள்களை திருடிய 2 பேர் கைது செய்யப்பட்டனர். அவர்களிடம் இருந்து 12 மோட்டார் சைக்கிள்களை போலீசார் பறிமுதல் செய்தனர்.
மன்னார்குடி,

திருவாரூர் மாவட்டம் மன்னார்குடி பகுதியில் அடிக்கடி மோட்டார் சைக்கிள்கள் திருட்டு போனது. இது குறித்து மோட்டார் சைக்கிளை இழந்தவர்கள் போலீசில் புகார் அளித்தனர். இதன் பேரில் போலீசார் மோட்டார் சைக்கிளை திருடி சென்ற மர்ம நபர்களை தேடி வந்தனர்.


இந்தநிலையில் நேற்று மதுக்கூர் சாலையில் கோபிரளையம் பகுதியில் போலீசார் வாகன சோதனையில் ஈடுபட்டிருந்தனர். அப்போது மோட்டார் சைக்கிளில் வந்த 2 வாலிபர்களை போலீசார் தடுத்து நிறுத்தினர். உடனே அந்த வாலிபர்கள் அங்கிருந்து தப்பி ஓடினர். அவர்களை போலீசார் விரட்டி பிடித்து மன்னார்குடி போலீஸ் நிலையத்துக்கு கொண்டு சென்று விசாரணை நடத்தினர்.

கைது

விசாரணையில் அவர்கள், தஞ்சை மாவட்டம் மதுக்கூர் அருகே உள்ள பாவாஜி கோட்டையை சேர்ந்த முத்துராஜா (வயது 24), அதே பகுதியை சேர்ந்த சுரேஷ் (23) என தெரியவந்தது. மேலும் இவர்கள் இருவரும் மன்னார்குடி, மதுக்கூர், பட்டுக்கோட்டை ஆகிய பகுதி களில் மோட்டார் சைக்கிள்களை திருடியது தெரியவந்தது. முத்துராஜா, சுரேஷ் ஆகிய இருவரையும் கைது செய்த போலீசார் அவர்களிடம் இருந்து 12 மோட்டார் சைக்கிள்களை பறிமுதல் செய்தனர். கைது செய்யப்பட்ட இருவரும் திருத்துறைப்பூண்டி கோர்ட்டில் ஆஜர்படுத்தப்பட்டு திருச்சி மத்திய சிறையில் அடைக்கப்பட்டனர். 

தொடர்புடைய செய்திகள்

1. தென்பெண்ணையாற்றில் மணல் கடத்தலைத் தடுக்க பள்ளம் தோண்டி தடுப்புகள்
பாகூர் அருகே தென்பெண்ணையாற்றில் மணல் கடத்தலைத் தடுக்க மாட்டு வண்டிகள் செல்லும் பாதையில் பள்ளம் தோண்டி தடுப்புகள் ஏற்படுத்தப்பட்டுள்ளன.
2. கோவில்களில் உண்டியலை உடைத்து திருட்டு: சேலத்தில் 7 வாலிபர்கள் கைது
சேலம் மாநகரில் கோவில்களில் உண்டியலை உடைத்து திருட்டு சம்பவத்தில் ஈடுபட்ட 7 வாலிபர்களை போலீசார் கைது செய்தனர்.
3. கல்லக்குடியில் போலீஸ் நிலையம் அருகே வீட்டின் பூட்டை உடைத்து 22 பவுன் நகைகள் திருட்டு
கல்லக்குடியில் போலீஸ் நிலையம் அருகே பட்டப்பகலில் வீட்டின் பூட்டை உடைத்து 22 பவுன் நகைகளை கொள்ளையடித்து சென்ற மர்மநபர்களை போலீசார் வலைவீசி தேடி வருகின்றனர்.
4. உப்பிலியபுரம் அருகே ஓய்வு பெற்ற வங்கி அதிகாரி வீட்டில் பூட்டை உடைத்து நகை-பணம் திருட்டு
உப்பிலியபுரம் அருகே ஓய்வுபெற்ற வங்கி அதிகாரி வீட்டில் பூட்டை உடைத்து நகை மற்றும் பணத்தை மர்ம ஆசாமிகள் திருடிச்சென்றனர்.
5. சேலத்தில் அடுத்தடுத்து சம்பவம்: மேலும் 4 கோவில்களில் உண்டியலை உடைத்து திருட்டு
சேலத்தில் மேலும் 4 கோவில்களில் உண்டியலை உடைத்து மர்மநபர்கள் பணத்தை திருடி சென்ற சம்பவத்தால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.