மாவட்ட செய்திகள்

தர்மபுரி அருகே, ஏரியில் மூழ்கி 2 மாணவர்கள் பலி + "||" + Near Dharmapuri, 2 students drowned in lake

தர்மபுரி அருகே, ஏரியில் மூழ்கி 2 மாணவர்கள் பலி

தர்மபுரி அருகே, ஏரியில் மூழ்கி 2 மாணவர்கள் பலி
தர்மபுரி அருகே ஏரியில் மூழ்கி 2 மாணவர்கள் பரிதாபமாக இறந்தனர். இந்த சம்பவம் குறித்து போலீஸ் தரப்பில் கூறப் பட்டதாவது:-
பாப்பாரப்பட்டி,

தர்மபுரி அருகே உள்ள இண்டூர் பாவடி தெருவை சேர்ந்தவர் ராஜா. இவருடைய மகன்கள் லோகேஷ்வரன்(வயது 10), யுவராஜ் (7). இண்டூர் முன்சீப் தெருவை சேர்ந்தவர் சிவன். இவருடைய மகன்கள் ஜெகதீரகுமார் (10), கோகுல் (7). இவர்களில் லோகேஷ்வரனும், ஜெகதீரகுமாரும் அதே பகுதியில் உள்ள அரசு பள்ளியில் 5-ம் வகுப்பும், யுவராஜ், கோகுல் ஆகியோர் 3-ம் வகுப்பும் படித்து வந்தனர்.

பள்ளிக்கு விடுமுறை என்பதால் நேற்று மாணவர்கள் 4 பேரும் அந்த பகுதியில் உள்ள ஏரிக்கு குளிக்க சென்றனர். லோகேஸ்வரனும், கோகுலும் ஏரியில் குளித்த போது தண்ணீரில் மூழ்கினர். ஜெகதீரகுமார், யுவராஜ் ஆகிய 2 பேரும் தத்தளித்தனர். இவர்கள் 2 பேரின் சத்தம் கேட்டு அங்கு ஆடு, மாடுகள் மேய்த்து கொண்டு இருந்தவர்கள் ஓடி வந்து ஜெகதீரகுமார், யுவராஜ் ஆகிய 2 பேரையும் மீட்டனர். ஆனால் லோகேஸ்வரன், கோகுல் ஆகியோர் ஏரியில் மூழ்கி உயிரிழந்தனர்.

இதுகுறித்து இண்டூர் போலீசாருக்கும், மாணவர்களின் குடும்பத்தினருக்கும் தகவல் தெரிவிக்கப்பட்டது. அதன்பேரில் அவர்கள் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்தனர். போலீசார் இறந்த 2 மாணவர்களின் உடல்களையும் பொதுமக்கள் உதவியுடன் ஏரியில் இருந்து மீட்டு பிரேத பரிசோதனைக்காக தர்மபுரி அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். அப்போது அங்கிருந்த மாணவர்களின் குடும்பத்தினர் மற்றும் உறவினர்கள் கதறி அழுதனர்.

இந்த சம்பவம் குறித்து இண்டூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். 2 மாணவர்கள் ஏரியில் மூழ்கி இறந்த சம்பவம் அந்த பகுதியில் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.

தொடர்புடைய செய்திகள்

1. ஏரி, குளங்களில் உள்ள சீமைக்கருவேல மரங்களை அகற்ற வேண்டும் குறைதீர்க்கும் கூட்டத்தில் விவசாயிகள் கோரிக்கை
ஏரி, குளங்களில் உள்ள சீமைக்கருவேல மரங்களை அகற்ற வேண்டும் என்று குறைதீர்க்கும் கூட்டத்தில் கலெக்டரிடம் விவசாயிகள் கோரிக்கை விடுத்தனர்.
2. ஏரி, குளங்களில் உயிர்பலி ஏற்படாமல் தடுக்க என்ன நடவடிக்கை? - கலெக்டர்கள் அறிக்கை தாக்கல் செய்ய ஐகோர்ட்டு உத்தரவு
ஏரி, குளங்களில் உயிர்பலி ஏற்படாமல் தடுக்க எடுத்த நடவடிக்கை குறித்து அனைத்து மாவட்ட கலெக்டர்களும் 2 வாரங்களுக்குள் அறிக்கை தாக்கல் செய்ய வேண்டும் என்று சென்னை ஐகோர்ட்டு உத்தரவிட்டுள்ளது.
3. திட்டக்குடி அருகே, ஏரியில் பெண் பிணம் - கொலையா? போலீசார் விசாரணை
திட்டக்குடி அருகே ஏரியில் பெண் பிணமாக கிடந்தார். அவர் கொலை செய்யப்பட்டாரா? என்பது குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
4. ஏரியில் உள்ள மின்மோட்டாரை இயக்குவதற்காக, சைக்கிள் துடுப்பு படகு வடிவமைப்பு
ஏரியில் உள்ள மின்மோட்டாரை இயக்குவதற்காக சைக்கிள் துடுப்பு படகை வடிவமைத்த ஊராட்சி செயலாளரை பொதுமக்கள் பாராட்டினர்.
5. உளுந்தூர்பேட்டையில், ஏரி ஆக்கிரமிப்புகள் அகற்றம் - அதிகாரிகள் நடவடிக்கை
உளுந்தூர்பேட்டையில் ஏரியை ஆக்கிரமித்து சாகுபடி செய்யப்பட்ட கரும்பு பயிர்களை அதிகாரிகள் அகற்றி நடவடிக்கை மேற்கொண்டுள்ளனர்.

ஆசிரியரின் தேர்வுகள்...