மாவட்ட செய்திகள்

ரூ.12 ஆயிரம் லஞ்சம் பெற்ற மாநகராட்சி அதிகாரி கைது + "||" + Municipal officer arrested for accepting Rs. 12,000 bribe

ரூ.12 ஆயிரம் லஞ்சம் பெற்ற மாநகராட்சி அதிகாரி கைது

ரூ.12 ஆயிரம் லஞ்சம் பெற்ற மாநகராட்சி அதிகாரி கைது
ரூ.12 ஆயிரம் லஞ்சம் பெற்ற மாநகராட்சி அதிகாரி கைது செய்யப்பட்டார்.
மும்பை, 

மும்பை காந்திவிலி ஆர் தெற்கு வார்டு மாநகராட்சி அதிகாரியாக இருந்து வருபவர் சஞ்சீவ் வல்சந்திரா. இவர் சம்பவத்தன்று அப்பகுதியில் நடைபாதைகளை ஆக்கிரமிப்பு செய்யும் வியாபாரிகளின் உடைமைகளை பறிமுதல் செய்து உள்ளார். இந்த நிலையில் பறிமுதல் செய்யப்பட்ட ஒரு காய்கறி வியாபாரி, அதிகாரி சஞ்சீவ் வல்சந்திராவை சந்தித்து தனது உடைமைகளை திரும்பி தரும்படி கோரினார். இதற்கு அதிகாரி ரூ.12 ஆயிரம் லஞ்சமாக தந்தால் திருப்பி தருவதாக தெரிவித்தார். பணம் தருவதாக கூறிய வியாபாரி சம்பவம் குறித்து லஞ்ச ஒழிப்பு போலீசில் புகார் அளித்தார்.

இதையடுத்து போலீசார் யோசனைப்படி வியாபாரி மாநகராட்சி அலுவலகத்தில் இருந்த அதிகாரியை சந்தித்து பணத்தை கொடுத்தார். பணத்தை பெற்ற அதிகாரி சஞ்சீவ் வல்சந்திராவை அங்கு மறைந்து இருந்த லஞ்ச ஒழிப்பு போலீசார் கையும் களவுமாக பிடித்து கைது செய்தனர். மேலும் அவர் மீது வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

தொடர்புடைய செய்திகள்

1. வத்தலக்குண்டு பகுதியில் திருட்டு, வழிப்பறியில் ஈடுபட்டவர் கைது - 27 பவுன் நகை பறிமுதல்
வத்தலக்குண்டு பகுதியில் திருட்டு, வழிப்பறியில் ஈடுபட்டவர் கைது செய்யப்பட்டார். அவரிடம் இருந்து 27 பவுன் நகை பறிமுதல் செய்யப்பட்டது.
2. பெண்களிடம் நகை பறித்த 2 வாலிபர்கள் கைது; 10 பவுன் மீட்பு
குடியாத்தம் மற்றும் சுற்றுப்பகுதியில் பெண்களிடம் நகை பறித்த 2 வாலிபர்களை போலீசார் கைது செய்தனர்.
3. விழுப்புரத்தில் ரவுடியை வெட்டிக்கொன்ற 2 நண்பர்கள் கைது பரபரப்பு தகவல்கள்
விழுப்புரத்தில் ரவுடியை வெட்டிக்கொன்ற வழக்கில் அவரது நண்பர்கள் 2 பேர் கைது செய்யப்பட்டனர்.
4. 40 பவுன் நகைகள் மீட்பு: ‘‘சூதாடுவதற்காக கொள்ளையில் ஈடுபட்டேன்’’ கைதான வாலிபர் வாக்குமூலம்
குமரியில் கொள்ளை போன 40 பவுன் நகைகள் மீட்கப்பட்டன. பணம் வைத்து சூதாடுவதற்காக கொள்ளையில் ஈடுபட்டதாக கைதான வாலிபர் வாக்குமூலம் அளித்துள்ளார். இந்த பரபரப்பு சம்பவம் பற்றிய விவரம் வருமாறு:-
5. குளிர்பானத்தில் மது கலந்து கொடுத்து பிளஸ்-1 மாணவி பாலியல் பலாத்காரம் காதலன் கைது
கிருஷ்ணகிரி அருகே குளிர்பானத்தில் மது கலந்து கொடுத்து பிளஸ்-1 மாணவியை பாலியல் பலாத்காரம் செய்த காதலன் கைது செய்யப்பட்டார். மேலும் 2 பேரை போலீசார் வலைவீசி தேடி வருகிறார்கள்.