கொரோனா வைரஸ் பாதிப்பு எதிரொலி: அரசு மருத்துவமனையில், காய்ச்சலுக்கு சிகிச்சை அளிக்க தனி வார்டு


கொரோனா வைரஸ் பாதிப்பு எதிரொலி: அரசு மருத்துவமனையில், காய்ச்சலுக்கு சிகிச்சை அளிக்க தனி வார்டு
x
தினத்தந்தி 3 Feb 2020 4:30 AM IST (Updated: 2 Feb 2020 11:03 PM IST)
t-max-icont-min-icon

கொரோனா வைரஸ் பாதிப்பு எதிரொலியாக கும்பகோணம் அரசு மருத்துவமனையில் காய்ச்சலுக்கு சிகிச்சை அளிக்க தனி வார்டு அமைக்கப்பட்டுள்ளது.

கும்பகோணம்,

சீனாவில் கொரோனா வைரஸ் தாக்கத்தால் பலர் பாதிக்கப்பட்டனர். இந்தியாவிலும் சிலருக்கு கொரோனா வைரஸ் பாதிப்பு இருப்பது கண்டறியப்பட்டுள்ளது. இதன் எதிரொலியாக நாடு முழுவதும் முன் எச்சரிக்கை நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. தஞ்சை மாவட்டம் கும்பகோணத்தில் உள்ள அரசு மருத்துவமனையில் காய்ச்சலால் பாதிக்கப்பட்டவர்களுக்கு சிகிச்சை அளிக்க தனி வார்டு அமைக்கப்பட்டு உள்ளது.

இது குறித்து மருத்துவமனையை சேர்ந்த டாக்டர்கள் கூறியதாவது:-

சளி-இருமல்

பனிக்காலத்தில் பல்வேறு விதமான நோய்கள் வருவதற்கான வாய்ப்புகள் உள்ளது. கும்பகோணம் அரசு மருத்துவமனையில் காய்ச்சல் பாதிப்புக்கு தனி வார்டு அமைத்துள்ளோம். காய்ச்சல் பாதிப்புக்கு சிகிச்சை பெற வந்த ஒருவருக்கு டெங்கு அறிகுறி இருப்பது கண்டறியப்பட்டு, தொடர்ந்து சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

இருமல், தும்மல், சளி, வறண்ட தொண்டை, காய்ச்சல் போன்றவை 2 நாட்களுக்கு மேல் நீடித்தால் உடனடியாக மருத்துவமனையை அணுக வேண்டும். நோய் அறிகுறி தென்பட்டால் மூக்கு, வாயை மறைக்கும் ‘மாஸ்க்’ அணிந்து கொண்டு வெளியே செல்ல வேண்டும். சுற்றுப்புறத்தை தூய்மையாக பராமரிப்பதில் கவனம் செலுத்த வேண்டும்.

இவ்வாறு டாக்டர்கள் கூறினர்.

Next Story