தி.மு.க. கூட்டணி கட்சிகள் சார்பில் குடியுரிமை திருத்த சட்டத்துக்கு எதிராக கையெழுத்து இயக்கம்
திண்டுக்கல் மாவட்ட பகுதிகளில் தி.மு.க. கூட்டணி கட்சிகள் சார்பில் குடியுரிமை திருத்த சட்டத்துக்கு எதிராக கையெழுத்து இயக்கம் நடத்தப்பட்டது.
திண்டுக்கல்,
குடியுரிமை திருத்த சட்டத்துக்கு எதிர்ப்பு தெரிவித்து தி.மு.க. கூட்டணி கட்சிகள் சார்பில் பல்வேறு போராட்டங்கள் நடத்தப்பட்டு வருகிறது. அந்த வகையில் மாவட்டம் முழுவதும் நேற்று குடியுரிமை திருத்த சட்டத்துக்கு எதிராக கையெழுத்து இயக்கம் நடத்தப்பட்டது. அதன்படி திண்டுக்கல் மணிக்கூண்டு அருகே பொதுமக்களிடம் கையெழுத்து வாங்கும் நிகழ்ச்சி நடந்தது. இதற்கு தி.மு.க. துணை பொதுச்செயலாளர் இ.பெரியசாமி எம்.எல்.ஏ. தலைமை தாங்கினார். மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு மாநில செயற்குழு உறுப்பினரும், முன்னாள் எம்.எல்.ஏ.வுமான பாலபாரதி, ம.தி.மு.க. மாவட்ட செயலாளர் செல்வராகவன், நகர காங்கிரஸ் தலைவர் சொக்கலிங்கம் உள்பட பலர் முன்னிலை வகித்தனர்.
தொடர்ந்து பொதுமக்களிடம் குடியுரிமை திருத்த சட்டத்துக்கு எதிராக கையெழுத்து பெறப்பட்டது. இதில் கல்லூரி மாணவிகள், பெண்கள் என ஏராளமானவர்கள் ஆர்வமுடன் வந்து கையெழுத்து போட்டு சென்றனர். முன்னதாக இ.பெரியசாமி நிருபர்களுக்கு பேட்டியளித்தார். அப்போது, குடியுரிமை திருத்த சட்டம், தேசிய மக்கள் தொகை பதிவேடு, தேசிய குடிமக்கள் பதிவேடு ஆகியவற்றுக்கு எதிர்ப்பு தெரிவித்து தி.மு.க. கூட்டணி சார்பில் தொடர்ந்து போராட்டம் நடத்தப்படும். இந்த சட்டங்கள் அனைத்தும் திரும்ப பெறப்படும்வரை போராட்டம் தொடரும் என்றார்.
வேடசந்தூர், நத்தம்
அதேபோல், வேடசந்தூரில் தி.மு.க. கூட்டணி கட்சிகள் சார்பில் கையெழுத்து இயக்கம் நடந்தது. இதற்கு தி.மு.க. தெற்கு ஒன்றிய செயலாளர் வீராசாமிநாதன் தலைமை தாங்கினார். வடக்கு ஒன்றிய செயலாளர் கவிதாபார்த்திபன், நகர செயலாளர் கார்த்திகேயன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். நிகழ்ச்சியில் முன்னாள் எம்.எல்.ஏ. தண்டபாணி, காங்கிரஸ் கட்சி வட்டார தலைவர் சாமிநாதன், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சி ஒன்றிய செயலாளர் முனியப்பன், ம.தி.மு.க. ஒன்றிய செயலாளர் சக்திவேல் உள்பட பலர் கலந்துகொண்டு குடியுரிமை திருத்த சட்டத்துக்கு எதிராக பிரசாரம் செய்தனர். முன்னதாக மைக்செட் அமைத்து பிரசாரம் செய்ய போலீஸ் அனுமதி மறுக்கப்பட்டிருந்தது. ஆனாலும் தடையை மீறி மைக்செட் மூலம் தி.மு.க. கூட்டணி கட்சி நிர்வாகிகள் பிரசாரம் செய்தனர்.
நத்தம் பஸ் நிலையம் அருகே தி.மு.க. கூட்டணி கட்சிகள் சார்பில் குடியுரிமை திருத்த சட்டத்துக்கு எதிராக கையெழுத்து இயக்கம் நடத்தப்பட்டது. இந்த நிகழ்ச்சிக்கு ஆண்டிஅம்பலம் எம்.எல்.ஏ. தலைமை தாங்கி கையொப்ப மிட்டார். தி.மு.க. தலைமை செயற்குழு உறுப்பினர் விஜயன், ஒன்றிய செயலாளர்கள் ரத்தினக்குமார், வெள்ளைச்சாமி, மாநில பொதுக்குழு உறுப்பினர் ராஜ்மோகன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். இதில் நகர செயலாளர் முத்துகுமார்சாமி மற்றும் காங்கிரஸ், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு, ம.தி.மு.க., மனிதநேய மக்கள் கட்சி உள்ளிட்ட கட்சிகளை சேர்ந்த நிர்வாகிகள் பலர் கலந்து கொண்டனர்.
வத்தலக்குண்டு
வத்தலக்குண்டுவில் தி.மு.க மற்றும் கூட்டணி கட்சிகள் சார்பில் கையெழுத்து இயக்கம் நடந்தது. இந்த நிகழ்ச்சிக்கு தி.மு.க. ஒன்றிய செயலாளர் முருகன் தலைமை தாங்கினார். நகர செயலாளர் சின்னத்துரை முன்னிலை வகித்தார். மாவட்ட கவுன்சிலர் கனிக்குமார், காங்கிரஸ் கட்சியின் மாவட்ட நிர்வாகி கனவாபீர், ம.தி.மு.க. ஒன்றிய செயலாளர் மருது ஆறுமுகம் உள்பட பலர் கலந்துகொண்டனர். தொடர்ந்து பொதுமக்களிடம் குடியுரிமை திருத்த சட்டத்துக்கு எதிராக கையெழுத்து பெறப்பட்டது.
பழனி பஸ் நிலைய ரவுண்டானா அருகில் தி.மு.க. மற்றும் கூட்டணி கட்சிகள் சார்பில் குடியுரிமை திருத்த சட்டத்திற்கு எதிராக கையெழுத்து இயக்கம் நடைபெற்றது. இதில் அந்தந்த கட்சி நிர்வாகிகள், தொண்டர்கள் கையெழுத்திட்டனர்.

Related Tags :
Next Story