மாவட்ட செய்திகள்

வைக்கோல்போர் ஏற்றி வந்த சரக்கு வேன் தீயில் எரிந்து நாசம் + "||" + A van carrying hay was destroyed in a fire

வைக்கோல்போர் ஏற்றி வந்த சரக்கு வேன் தீயில் எரிந்து நாசம்

வைக்கோல்போர் ஏற்றி வந்த சரக்கு வேன் தீயில் எரிந்து நாசம்
மின்கம்பி உரசியதில் வைக்கோல்போர் ஏற்றி வந்த சரக்கு வேன் தீயில் எரிந்த நாசமானது.
லாலாபேட்டை, 

திருச்சி மாவட்டம், பெட்டவாய்த்தலையை சேர்ந்தவர் பரணி (வயது 25). சரக்குவேன் டிரைவர். இவர் ஒரு சரக்கு வேனில் 25 கட்டு வைக்கோல்போர் ஏற்றி கொண்டு கரூர் மாவட்டம், லாலாபேட்டை ராமநாதன் என்பவரது வீட்டிற்கு வந்து கொண்டிருந்தார். அப்போது லாலாபேட்டை கொடிக்கால் தெரு மாரியம்மன் கோவில் அருகே வந்தபோது, தாழ்வான சென்ற மின் கம்பி மீது வைக்கோல்போரில் பட்டு எரிந்தது. இதைக்கண்ட அக்கம் பக்கத்தில் உள்ளவர்கள் கூச்சலிட்டனர். இதையடுத்து உடனடியாக பரணி இறங்கி உயிர் தப்பினார். இதையடுத்து அங்கிருந்த பொதுமக்கள் தண்ணீரை தீயை அணைக்க முயன்றனர். இருப்பினும் கட்டுப்படுத்த முடியவில்லை.

இதுகுறித்து கரூர் தீயணைப்பு நிலையத்திற்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. அதன்பேரில் நிலைய அதிகாரி விஜயகுமார் தலைமையிலான தீயணைப்பு வீரர்கள் சம்பவ இடத்திற்கு வந்தனர். பின்னர் தீயை தண்ணீரை ஊற்றி அணைத்தனர். இருப்பினும் வைக்கோல்போர் மற்றும் சரக்குவேன் தீயில் எரிந்து நாசமானது. இதுகுறித்து தகவல் அறிந்த வருவாய் ஆய்வாளர் சின்ன சக்கையா, கிராம நிர்வாக அதிகாரி லிங்கேஸ்வரன், மண்டல துணை வட்டார வளர்ச்சி அலுவலர் சுரேஷ் ஆகியோர் சம்பவ இடத்திற்கு பார்வையிட்டனர். இதுகுறித்து லாலாபேட்டை போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

தொடர்புடைய செய்திகள்

1. அந்தியூர் அருகே தீ விபத்து கோழி–புறாக்கள் கருகி சாவு
அந்தியூர் அருகே தீ விபத்தில் கோழி, புறாக்கள் கருகி செத்தன.
2. மருந்து குடோனில் பயங்கர தீ விபத்து; மக்களுக்கு மூச்சுத்திணறல் ஏற்பட்டதால் பரபரப்பு
மதுரையில் மருந்து மற்றும் குளிர்பானங்கள் வைக்கப்பட்டிருந்த குடோனில் ஏற்பட்ட பயங்கர தீ விபத்தில் ஏராளமான பொருட்கள் எரிந்து நாசமாயின.
3. பல்லடம் அருகே சாய ஆலையில் தீ விபத்து: ரூ.1½ கோடி எந்திரம் எரிந்து சேதம்
பல்லடம் அருகே உள்ள அருள்புரம் பகுதியில் தனியார் சாய ஆலையில் தீ விபத்து ஏற்பட்டது. இந்த விபத்தில் சுமார் ரூ1½ கோடி மதிப்புள்ள எந்திரம் எரிந்து சேதமானது.
4. கியாஸ் கசிவால் தீ விபத்து சிகிச்சை பலனின்றி ஒருவர் சாவு
காஞ்சீபுரம் மாவட்டம் ஸ்ரீபெரும்புதூர், கியாஸ் கசிவால் தீ விபத்து ஏற்பட்டதில் ஒருவர் சிகிச்சை பலனின்றி பரிதாபமாக இறந்தார்.
5. வீட்டில் கியாஸ் கசிந்து தீ விபத்து குழந்தை உள்பட 4 பேர் படுகாயம்
வீட்டில் கியாஸ் கசிந்து தீ விபத்து ஏற்பட்டதில் குழந்தை உள்பட 4 பேர் படுகாயம் அடைந்தனர்.