அண்ணா நினைவு நாள் அனுசரிப்பு
மதுரை மாவட்டத்தில் அண்ணா நினைவு நாளையொட்டி அவரது சிலைக்கு அ.தி.மு.க., தி.மு.க., அ.ம.மு.க. உள்ளிட்ட பல்வேறு கட்சியினர் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர்.
மதுரை,
பேரறிஞர் அண்ணாவின் 51-வது நினைவு தினம் நேற்று அனுசரிக்கப்பட்டது. இதையொட்டி மதுரை நெல்பேட்டை பகுதியில் உள்ள அவரது சிலைக்கு அ.தி.மு.க. சார்பில் மாநகர் மாவட்ட துணை செயலாளர் தங்கம், பொருளாளர் ராஜா ஆகியோர் தலைமையில் முன்னாள் எம்.எல்.ஏ. அண்ணாத்துரை, பகுதி செயலாளர் செந்தில் உள்ளிட்டோர் மாலை அணிவித்தனர்.
தி.மு.க. சார்பில் மாநகர் மாவட்ட பொறுப்பாளர் தளபதி தலைமையில் டாக்டர் சரவணன் எம்.எல்.ஏ., முன்னாள் அமைச்சர்கள் பொன்.முத்துராமலிங்கம், தமிழரசி ஆகியோரும், ம.தி.மு.க. சார்பில் மாநகர் மாவட்ட செயலாளர் பூமிநாதன், அ.ம.மு.க. சார்பில் தெற்கு, வடக்கு மாவட்ட செயலாளர்கள் ஜெயபால், ராஜலிங்கம், அண்ணா திராவிடர் கழகம் சார்பில் புறநகர் மாவட்ட செயலாளர் வசந்தகுமார், ரவிச்சந்திரன், மீனாட்சி சுந்தரம், செல்வ ராஜூ மற்றும் நிர்வாகிகள், தொண்டர்கள் மாலை அணிவித்தனர்.
மேலூர் அருகே திருவாதவூரில் உள்ள அண்ணா சிலைக்கு மேலூர் எம்.எல்.ஏ. பெரியபுள்ளான், முன்னாள் எம்.எல்.ஏ. தமிழரசன் ஆகியோர் தலைமையில் அ.தி.மு.க.வினர் ஊர்வலமாக சென்று மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர். யூனியன் தலைவர் பொன்னுச்சாமி, நகர் செயலாளர் பாஸ்கரன், கொட்டாம்பட்டி ஒன்றிய செயலாளர் வெற்றிச்செழியன், எம்.ஜி.ஆர். மன்ற இணைச் செயலாளர் பெரியசாமி, மதுரை புறநகர் மாவட்ட ஜெயலலிதா பேரவை துணைச் செயலாளர் ஜபார் மற்றும் ஊராட்சி தலைவர்கள், ஒன்றிய கவுன்சிலர்கள், கூட்டுறவு சங்க தலைவர்கள் மற்றும் கட்சி நிர்வாகிகள் அஞ்சலி செலுத்தினர்.
இதேபோல் அ.ம.மு.க. புறநகர் மாவட்ட செயலாளர் சரவணன் தலைமையில் அக்கட்சியினர் ஊர்வலமாக சென்று திருவாதவூரில் உள்ள அண்ணா சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர். நிகழ்ச்சியில் மாநில ஜெயலலிதா பேரவை நிர்வாகி செல்வராஜ் மற்றும் மாநில, மாவட்ட, ஒன்றிய நிர்வாகிகள், உள்ளாட்சி அமைப்புகள் நிர்வாகிகள், தொண்டர்கள் கலந்து கொண்டனர்.
வாடிப்பட்டியில் மதுரை புறநகர் மேற்கு மாவட்ட அ.தி.மு.க. சார்பில் நடந்த அண்ணா நினைவு நாள் நிகழ்ச்சிக்கு பேரூர் செயலாளர் பாப்புரெட்டி தலைமை தாங்கினார். பேரவை மாநில இணை செயலாளர் வெற்றிவேல், மாவட்ட துணை செயலாளர் அய்யப்பன், ஒன்றிய செயலாளர்கள் செல்லப்பாண்டி ரவிச்சந்திரன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். அமைப்பு செயலாளர் முன்னாள் எம்.எல்.ஏ. முத்துராமலிங்கம் தலைமையில் மவுன ஊர்வலம் நடந்தது. நீதிபதி எம்.எல்.ஏ. அண்ணா சிலைக்கு மாலை அணிவித்து மவுன அஞ்சலி செலுத்தினார். இதில் கூட்டுறவு சங்க தலைவர்கள் துரை நடராஜன் உள்பட பலர் கலந்து கொண்டனர்.
மதுரை வடக்கு மாவட்ட தி.மு.க. சார்பில் நடந்த நிகழ்ச்சிக்கு மாவட்ட செயலாளர் மூர்த்தி எம்.எல்.ஏ. தலைமை தாங்கினார். தெற்கு மாவட்ட செயலாளர் மணிமாறன், முன்னாள் பேரூர் செயலாளர் பால்பாண்டியன், மாவட்ட துணை செயலாளர் சேகர், ஒன்றிய செயலாளர் பால ராஜேந்திரன், முன்னாள் எம்.எல்.ஏ. ராதாகிருஷ்ணன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். முன்னாள் சபாநாயகர் சேடபட்டி முத்தையா அண்ணா சிலைக்கு மாலை அணிவித்தார். அ.ம.மு.க. ஒன்றிய செயலாளர் ராஜன் தலைமை தாங்கி அண்ணா சிலைக்கு மாலை அணிவித்து மவுன அஞ்சலி செலுத்தினார். பொதுக்குழு உறுப்பினர் ரிஷபம் ராமநாதன், டிராக்டர் முருகேசன், ஒன்றிய துணை செயலாளர்கள் மீனாட்சி சுந்தரம், சுரேஷ், சோழவந்தான் பேரூர் செயலாளர் சத்தியபிரகாஷ் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
சோழவந்தான் கடைவீதியில் அண்ணா உருவப்படத்துக்கு அ.தி.மு.க.வினர் மாலை அணிவித்து அஞ்சலி செலுத்தினர். இதில் முன்னாள் பேரூராட்சி தலைவர் முருகேசன், நகர கூட்டுறவு வங்கி தலைவர் கண்ணன், முருகன் நல்லமணி உள்ளிட்ட அ.தி.மு.க.வினர் கலந்து கொண்டனர்.
அண்ணா நினைவு நாளையொட்டி சோழவந்தான் ஜெனகை மாரியம்மன் கோவிலில் கூட்டு சிறப்பு வழிபாடு, பொது விருந்து நடந்தது. தமிழ்நாடு கூட்டுறவு இணையம் தலைவர் செல்லப்பாண்டி தலைமை தாங்கினார். முன்னாள் பேரூராட்சி தலைவர் முருகேசன், நகர செயலாளர் கொரியர் கணேசன் முன்னிலை வகித்தனர். செயல் அலுவலர் சுசிலாராணி வரவேற்றார். வாடிப்பட்டி தாசில்தார் கிருஷ்ணகுமார் பொது விருந்தினை தொடங்கி வைத்தார்.
இதேபோல் குருவித்துறை சித்திர ரத வல்லப பெருமாள் கோவிலில் கூட்டு சிறப்பு வழிபாடு, பொது விருந்து நடந்தது. நிகழ்ச்சிக்கு செயல் அலுவலர் செந்தில்குமார் தலைமை தாங்கினார். தக்கார் ஜெய தேவி முன்னிலை வகித்தார். இதில் குருவித்துறை ஊராட்சி தலைவர் ரம்யா, உதவித் தலைவர் சீனிவாசன் உள்பட பலர் கலந்து கொண்டனர்.
அண்ணா நினைவுநாளையொட்டி திருப்பரங்குன்றம் முருகன் கோவிலில் சமபந்தி விருந்து மற்றும் சிறப்பு வழிபாடு நடைபெற்றது. விழாவில் டாக்டர் சரவணன் எம்.எல்.ஏ., கோவில் துணை ஆணையர் (பொறுப்பு) ராமசாமி, திருப்பரங்குன்றம் தாசில்தார் நாகராஜன், கிராம நிர்வாக அதிகாரி அழகேசன் உள்பட பலர் கலந்து கொண்டனர்.
மதுரை புறநகர் கிழக்கு மாவட்ட அ.தி.மு.க. சார்பில் திருப்பரங்குன்றம் பதினாறு கால் மண்டபம் அருகே அண்ணாவின் உருவப்படம் அலங்கரித்து பொதுமக்கள் பார்வைக்கு வைக்கப்பட்டது. நிகழ்ச்சியில் மதுரை புறநகர் அ.தி.மு.க. எம்.ஜி.ஆர். இளைஞரணி மாவட்ட செயலாளர் வக்கீல் ரமேஷ், திருப்பரங்குன்றம் ஒன்றிய செயலாளர் நிலையூர் முருகன் ஆகியோர் தலைமை தாங்கி அண்ணாவின் உருவப் படத்திற்கு மாலை அணிவித்து அஞ்சலி செலுத்தினர். நிகழ்ச்சியில் பொதுக்குழு உறுப்பினர் முத்துக்குமார், வட்ட செயலாளர்கள் பொன் முருகன், திருநகர் பாலமுருகன், கர்ணா உள்பட பலர் கலந்து கொண்டனர்.

Related Tags :
Next Story