சாலை விபத்துகளை தடுக்க கடுமையான சோதனைக்கு பின்னரே ஓட்டுனர் உரிமம் முதன்மை செயலாளர் பேட்டி

சாலை விபத்துகளை தடுக்க பெண்கள் உள்பட அனைவருக்கும் கடுமையான சோதனைக்கு பின்னரே ஓட்டுனர் உரிமம் வழங்கப்படும் என போக்குவரத்து துறை முதன்மை செயலாளர் கூறினார்.
வேலூர்,
சாலை பாதுகாப்பு தொடர்பான ஆய்வுக் கூட்டம் வேலூர் மண்டல அளவில் நேற்று கலெக்டர் அலுவலகத்தில் நடந்தது. கூட்டத்துக்கு போக்குவரத்து முதன்மை செயலாளர் தென்காசி எஸ்.ஜவகர் தலைமை தாங்கினார். போக்குவரத்து மற்றும் சாலை பாதுகாப்பு ஐ.ஜி.பிரமோத் குமார், திருப்பத்தூர் மாவட்ட கலெக்டர் சிவன்அருள், வேலூர் மாவட்ட வருவாய் அலுவலர் பார்த்திபன், வேலூர் சரக போலீஸ் டி.ஐ.ஜி. காமினி ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
கூட்டத்தில், வேலூர், திருப்பத்தூர், ராணிப்பேட்டை, திருவண்ணாமலை ஆகிய மாவட்டங்களில் சாலை விபத்துகளை குறைப்பது மற்றும் சாலை பாதுகாப்பு தொடர்பாக பொதுமக்கள், வாகன ஓட்டிகளுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்துதல் குறித்து ஆலோசிக்கப்பட்டது.
இதில், போலீஸ் சூப்பிரண்டுகள் பிரவேஷ்குமார் (வேலூர்), மயில்வாகனன் (ராணிப்பேட்டை), விஜயகுமார் (திருப்பத்தூர்), சிபிசக்ரவர்த்தி (திருவண்ணாமலை), ராணிப்பேட்டை உதவி கலெக்டர் இளம்பகவத், வேலூர் வட்டார போக்குவரத்து அலுவலர் ராமகிருஷ்ணன், வேலூர் கூடுதல் போலீஸ் சூப்பிரண்டு விஜயகுமார் உள்பட பலர் கலந்து கொண்டனர்.
2030-ம் ஆண்டிற்குள்...
கூட்டத்துக்கு பின்னர் போக்குவரத்து முதன்மை செயலாளர் தென்காசி எஸ்.ஜவகர் நிருபர்களிடம் கூறியதாவது:-
2016-ம் ஆண்டு இந்தியாவில் தமிழகத்தில் தான் அதிகளவு சாலை விபத்துகள் நடந்தன. இந்த விபத்துகள் மூலம் 17 ஆயிரம் பேர் உயிரிழந்தனர். அதைத்தொடர்ந்து போக்கு வரத்துத்துறை, காவல்துறை, நெடுஞ்சாலைத்துறை சார்பில் எடுக்கப்பட்ட பல்வேறு நடவடிக்கைகள் மூலம் கடந்த 3 ஆண்டுகளில் சாலை விபத்துகள் மற்றும் உயிரிழப்பு குறைந்துள்ளது. கடந்தாண்டு சாலை விபத்தில் 10 ஆயிரம் பேர் உயிரிழந்துள்ளனர்.
ஒருங்கிணைந்த வேலூர், திருவண்ணாமலை மாவட்டங்களில் கடந்த 2016-ம் ஆண்டு சாலை விபத்தில் 870 பேரும், கடந்தாண்டு சாலை விபத்தில் 375 பேரும் உயிரிழந்து உள்ளனர். சாலை விபத்துகளை தடுக்க பல்வேறு துறையினர் மூலம் விழிப்புணர்வு ஏற்படுத்தி வருகிறோம். 2030-ம் ஆண்டிற்குள் தமிழகத்தில் சாலை விபத்து மூலம் உயிரிழப்பு ஏற்படுவதை தடுப்பது என்பதுதான் போக்குவரத்துத்துறையின் நோக்கம் ஆகும். அதற்கேற்ப பல்வேறு நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகிறது.
கடுமையான சோதனைக்கு பின்னரே...
சாலை விபத்து நடைபெற்ற இடத்துக்கு 108 ஆம்புலன்சுகள் சுமார் 14 நிமிடங்களில் செல்கின்றன. இந்த நேரத்தை 12 நிமிடங்களாக குறைக்க நடவடிக்கை எடுக்கப்படுகிறது. தமிழகத்தில் கார், பஸ், மோட்டார் சைக்கிள்கள் உள்பட 3 கோடி சாலை போக்குவரத்து வாகனங்கள் உள்ளன. அவற்றில் 2 கோடியே 45 லட்சம் இருசக்கர வாகனங்கள் ஆகும். இருசக்கர வாகன ஓட்டிகள் ஹெல்மெட் அணிய வேண்டும், கார் ஓட்டுபவர்கள் சீட்பெல்ட் அணிய வேண்டும் என்று அறிவுறுத்தப்பட்டு வருகிறது. கடந்தாண்டு குடி போதையில் வாகனங்கள் ஓட்டியது, சிக்னலை மதிக்காமல் சென்றது, அதிவேகமாக வாகனங்களில் சென்றது உள்ளிட்டவற்றுக்காக ஒரு லட்சத்து 20 ஆயிரம் பேரின் ஓட்டுனர் உரிமம் ரத்து செய்யப்பட்டுள்ளது.
சாலை விபத்துகளை தடுக்க பெண்கள் உள்பட அனைவருக்கும் கடுமையான சோதனைக்கு பின்னரே இனிமேல் ஓட்டுனர் உரிமம் வழங்கப்படும். புதிதாக ஓட்டுனர் உரிமம் பெற சிறப்பு பாடத்திட்டம் கொண்டு வரப்படும். தேசிய நெடுஞ்சாலையில் அதிக விபத்துகள் ஏற்படுகிறது. இதற்கு வாகன ஓட்டிகளின் கவனக்குறைவு மற்றும் சாலை மோசமாக இருப்பதே காரணமாகும். 18 வயதுக்கு உட்பட்டவர்கள் இருசக்கர வாகனங்கள் ஓட்டுவது தவறாகும். அதையும் மீறி ஓட்டினால் அவர்களின் பெற்றோர் மீது நடவடிக்கை எடுக்கப்படும். சட்டத்தில் அதற்கு இடம் உள்ளது. சாலை விபத்துகளை தடுக்க டிரைவர்களுக்கு விழிப்புணர்வு மற்றும் சிறப்பு பயிற்சி வழங்கப்பட உள்ளது. இவ்வாறு அவர் கூறினார்.

Related Tags :
Next Story