ராஜாக்கமங்கலம் அருகே, இளம்பெண் குளிப்பதை படம் பிடித்த வேன் டிரைவர் கைது


ராஜாக்கமங்கலம் அருகே, இளம்பெண் குளிப்பதை படம் பிடித்த வேன் டிரைவர் கைது
x
தினத்தந்தி 6 Feb 2020 10:39 AM IST (Updated: 6 Feb 2020 10:39 AM IST)
t-max-icont-min-icon

ராஜாக்கமங்கலம் அருகே இளம்பெண் குளிப்பதை படம் பிடித்த வேன் டிரைவரை போலீசார் கைது செய்தனர். இதுகுறித்து போலீஸ் தரப்பில் கூறப்படுவதாவது:-

ராஜாக்கமங்கலம்,

நாகர்கோவிலை அடுத்த ராஜாக்கமங்கலம் எறும்புக்காடு பகுதியில் தனியார் வலைக்கம்பெனி உள்ளது. இங்கு உள்ளூர் மற்றும் வெளி மாவட்டத்தை சேர்ந்த ஏராளமான ஆண், பெண்கள் வேலை செய்து வருகிறார்கள். வெளியூரை சேர்ந்த பணியாளர்களுக்கு கம்பெனியின் உள்ளேயே தங்குவதற்கு வசதிகள் செய்து கொடுக்கப்பட்டுள்ளது.

இந்தநிலையில் நேற்று முன்தினம் வெளி மாவட்டத்தை சேர்ந்த இளம்பெண் ஒருவர் குளிப்பதை கம்பெனியில் வேன் டிரைவராக உள்ள பூச்சிவிளாகத்தை சேர்ந்த முத்துகுமரன்(வயது 30) என்பவர் செல்போனில் படம் பிடித்துள்ளார். இதை கண்ட இளம்பெண் கூச்சலிட்டார். அவரது சத்தம் கேட்டு சக தொழிலாளர்கள் விரைந்து வந்து முத்துகுமரனை மடக்கி பிடித்து ராஜாக்கமங்கலம் போலீஸ் நிலையத்தில் ஒப்படைத்தனர்.

இதையடுத்து இன்ஸ்பெக்டர் மீனா வழக்குப்பதிவு செய்து முத்துகுமரனை கைது செய்தார். மேலும், முத்துகுமரனின் செல்போனை பறிமுதல் செய்து இதேபோல் வேறு சம்பவத்திலும் ஈடுபட்டுள்ளாரா? என தீவிர விசாரணை நடத்தி வருகிறார்கள்.

Next Story