மாவட்ட செய்திகள்

திருச்சி அருகே கள்ளக்காதல் ஜோடி வி‌‌ஷம் குடித்து தற்கொலை காவிரி கரையோரம் பிணமாக கிடந்தனர் + "||" + Fake pair near Trichy They were found dead on the banks of the river Cauvery

திருச்சி அருகே கள்ளக்காதல் ஜோடி வி‌‌ஷம் குடித்து தற்கொலை காவிரி கரையோரம் பிணமாக கிடந்தனர்

திருச்சி அருகே கள்ளக்காதல் ஜோடி வி‌‌ஷம் குடித்து தற்கொலை காவிரி கரையோரம் பிணமாக கிடந்தனர்
திருச்சி அருகே கள்ளக்காதல் ஜோடி வி‌‌ஷம் குடித்து தற்கொலை செய்து கொண்டனர்.
ஜீயபுரம்,

திருச்சி புத்தூர் பி‌‌ஷப் குளத்தெருவை சேர்ந்தவர் ராஜா. இவரது மகன் ரமே‌‌ஷ்(வயது 31). சொந்தமாக கார் வைத்து ஓட்டி வந்தார். இவர், தென்னூர் இனாம்தோப்பு பகுதியை சேர்ந்த காவியா(23) என்ற பெண்ணை காதலித்து திருமணம் செய்து கொண்டார். இவர்களது திருமணம் கடந்த ஆண்டு மார்ச் மாதம் நடைபெற்றது. இவர்களுக்கு 7 மாதத்தில் ஆண் குழந்தை உள்ளது.


இந்நிலையில் நேற்று மாலை ரமே‌‌ஷ், ஒரு இளம்பெண்ணுடன் திருச்சி முத்தரசநல்லூர் அருகே உள்ள பழுர் காவிரி கரைக்கு காரில் வந்தார். அந்த பெண்ணுடன் நீண்டநேரம் பேசிக்கொண்டிருந்தார். பின்னர், அவர்கள் தாங்கள் கொண்டு வந்த வி‌‌ஷ பாட்டிலை எடுத்து குடித்தனர். சிறிது நேரத்தில் அவர்கள் வாயில் நுரை தள்ளியபடி கீழே விழுந்தனர்.

2 பேரும் சாவு

இதனை, அங்கு குளித்து கொண்டிருந்தவர்கள் பார்த்து போலீசாருக்கு தகவல் கொடுத்தனர். அதன்பேரில், ஜீயபுரம் போலீஸ் இன்ஸ்பெக்டர் பன்னீர்செல்வம் மற்றும் போலீசார் விரைந்து வந்து பார்த்தனர். அப்போது இருவரும் இறந்து விட்டது தெரியவந்தது. பின்னர் அவர்களது உடல்களை மீட்டு பிரேத பரிசோதனைக்காக திருச்சி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

பின்னர், காரில் போலீசார் சோதனை செய்தபோது அதில் 2 செல்போன்கள் இருந்தன. அதனையும், காரையும் போலீஸ் நிலையம் எடுத்துச் சென்றனர். இதுகுறித்து போலீசார் விசாரணை நடத்தியபோது ரமேசுடன் தற்கொலை செய்து கொண்டது, திருச்சி தென்னூர் சங்கீதபுரத்தை சேர்ந்த அந்தோணி என்பவரது மகள் ரீனா (18) என்பதும், அவர் புத்தூர் பகுதியில் உள்ள தனியார் மருத்துவமனை ஒன்றில் முதலாம் ஆண்டு நர்சிங் படித்து வந்ததும், அவ்வப்போது ரமேசின் காரில் சென்று வந்தபோது அவருடன் பழக்கம் ஏற்பட்டதும், நாளடைவில் இருவரும் காதலித்து வந்ததாகவும் தெரிய வந்தது.

காரணம் என்ன?

ஆனால், அவர்களது தற்கொலைக்கு காரணம் என்ன என்பது தெரியவில்லை. இந்த கள்ளக்காதல் உறவினர்களுக்கு தெரிந்து விட்டதால் இந்த முடிவை எடுத்தார்களா? அல்லது வேறு ஏதேனும் காரணமா? என்று போலீசார் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

தொடர்புடைய செய்திகள்

1. ஜெயலலிதா பிறந்த நாள் விழாவை முன்னிட்டு திருவாரூரில், 122 ஜோடிகளுக்கு திருமணம் இன்று நடக்கிறது
ஜெயலலிதாவின் 72-வது பிறந்தநாளை முன்னிட்டு அ.தி.மு.க. சார்பில் திருவாரூரில் 122 ஜோடிகளுக்கு திருமணம் இன்று (வெள்ளிக் கிழமை) நடக்கிறது.
2. காதலித்து ஏமாற்றிவிட்டு திருமணம் செய்ய மறுப்பு: காதலனை பிடித்து போலீஸ் நிலையத்திலேயே திருமணம் செய்துவைத்த போலீசார்
காதலித்து ஏமாற்றிவிட்டு திருமணம் செய்ய மறுப்பதாக இளம்பெண் அளித்த புகாரின்பேரில் காதலனை பிடித்து போலீஸ் நிலையத்திலேயே போலீசார் திருமணம் செய்து வைத்தனர். இந்த வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாக பரவி வருகிறது.
3. காலமெல்லாம் காதல் வாழ்க!
உலகமெங்கும் வியாபித்திருக்கின்ற ஓர் மந்திர சக்தி காதல். ஆதி முதற்கொண்டு இன்றுவரை காதல் கதைகள் பல கோடி; கவிதைகள் பத்துகோடி; கலைகளும், காவியங்களும் எண்ணிலடங்காதவை.
4. 65 வயது நிரம்பிய முதியோர்களுக்கு திருமணம்: கேரள மந்திரி நடத்தி வைத்தார்
65 வயது நிரம்பிய முதியோர்களுக்கு கேரள மந்திரி திருமணத்தை நடத்தி வைத்தார்.
5. 16 வயது மாணவியுடன் திருமணம்; போக்சோ சட்டத்தில் கொத்தனார் கைது - உடந்தையாக இருந்த மாணவியின் தாயும் சிக்கினார்
16 வயது உடைய பள்ளி மாணவியை திருமணம் செய்த கொத்தனாைர போக்சோ சட்டத்தில் போலீசார் கைது செய்தனர். இதற்கு உடந்தையாக இருந்த மாணவியின் தாயும் சிக்கினார்.