கள் இறக்குவதற்கான தடையை நீக்க வேண்டும் விவசாய சங்கங்களின் கூட்டமைப்பு தலைவர் பேட்டி
தமிழகத்தில் கள் இறக்குவதற்கான தடையை நீக்க வேண்டும் என்று தமிழ்நாடு விவசாய சங்கங்களின் கூட்டமைப்பு தலைவர் நல்லுசாமி தெரிவித்தார்.
தேனி,
தமிழ் மாநில பெண்கள் இயக்கம், தேனி, மதுரை உள்பட ஒருங்கிணைந்த 5 மாவட்ட பெரியாறு-வைகை பாசன விவசாயிகள் சங்கம், தமிழ்த்தேச மக்கள் முன்னணி உள்பட பல்வேறு அமைப்புகளின் ஒருங்கிணைப்பில், இயற்கை பாதுகாப்பு கூட்டமைப்பு தொடங்கப்பட்டு உள்ளது. இதன் தொடக்க விழா மற்றும் மாநாடு தேனியில் நடந்தது. விழாவுக்கு ஒருங்கிணைந்த 5 மாவட்ட பெரியாறு-வைகை பாசன விவசாயிகள் சங்க தலைவர் எஸ்.ஆர்.தேவர் தலைமை தாங்கினார். குடிமக்கள் இயக்க மாநில தலைவர் ராஜன் முன்னிலை வகித்தார். தமிழ்நாடு விவசாய சங்கங்களின் கூட்டமைப்பு தலைவர் நல்லுசாமி, திரைப்பட இயக்குனரும், தமிழர் நலப் பேரியக்க தலைவருமான களஞ்சியம் மற்றும் பலர் கலந்துகொண்டு பேசினர்.
கள் இறக்க அனுமதி
கூட்டத்தை தொடர்ந்து தமிழக விவசாய சங்கங்களின் கூட்டமைப்பு தலைவர் நல்லுசாமி நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:-
தமிழகத்தில் கள் இறக்குவதற்கு விதிக்கப்பட்ட தடையை நீக்க வேண்டும். தந்தை பெரியார், எம்.ஜி.ஆர். ஆகியோர் கள்ளுக்கு ஆதரவாளர்கள். பெரியார், கள்ளுக்கு கடையோ, தடையோ கூடாது என்று கூறியுள்ளார். கடை அமைப்பதற்கு ஏலம் நடத்தும் போது தான் கலப்படம் வருகிறது என்றார். எனவே, கள் இறக்குவதற்கு அனுமதி வழங்க வேண்டும். முல்லைப்பெரியாறு அணையின் நீர்மட்டத்தை 152 அடியாக உயர்த்த வேண்டும். இதற்காக பேபி அணையை பலப்படுத்தும் பணியை தொடங்குவதற்கு, அங்குள்ள சில காட்டு மரங்களை வெட்டுவதற்கு உரிய அனுமதியை அரசு வழங்க வேண்டும். காவிரி நதிநீர் பிரச்சினையில், சுப்ரீம் கோர்ட்டு தீர்ப்பை கர்நாடக அரசு மதிப்பது இல்லை. தேனி மாவட்டம், மேகமலை வனப்பகுதியை புலிகள் காப்பகமாக அறிவிக்க வேண்டும். நியூட்ரினோ திட்டத்தை வரவிடமாட்டோம்.
இவ்வாறு அவர் கூறினார்.

Related Tags :
Next Story