விஜய் படப்பிடிப்புக்கு பா.ஜ.க. எதிர்ப்பு ஏன்? நெய்வேலியில் எச்.ராஜா பேட்டி
விஜய் நடிக்கும் மாஸ்டர் படப்பிடிப்புக்கு பா.ஜ.க. எதிர்ப்பு தெரிவிப்பது ஏன் என்று நெய்வேலியில் அக்கட்சியின் தேசிய செயலாளர் எச்.ராஜா விளக்கமளித்துள்ளார்.
நெய்வேலி,
நாடு சுதந்திரம் அடைவதற்கு முன்பாக பல இடங்களில் கலவரங்கள் நடந்துள்ளன. அதே போன்று தமிழகத்தில் கலவரத்தை தூண்டக்கூடிய, கொலை வெறி தாக்குதல் நடத்திய சில அமைப்புகளை சேர்த்துக்கொண்டு தமிழகத்தில் கலவரத்தை தூண்டுவதற்காக மு.க.ஸ்டாலின் செயல்பட்டு வருகிறார். எனவே அரசியல் களத்தில் இருந்து தி.மு.க.வை மக்கள் வெளியேற்றுவார்கள். இதை 2021-ம் ஆண்டு செய்வோம்.
ஸ்ரீரங்கத்தில் வைத்த பொட்டை அழித்த மு.க.ஸ்டாலின் பகிரங்க மன்னிப்பு கேட்க வேண்டும்.
இவ்வாறு அவர் கூறினார்.
மாஸ்டர் படப்பிடிப்பு
இதைத்தொடர்ந்து நெய்வேலியில் நடிகர் விஜய்யின் மாஸ்டர் படப்பிடிப்புக்கு பா.ஜனதா எதிர்ப்பு தெரிவித்தது குறித்து அவரிடம் கேட்டபோது, நெய்வேலி என்.எல்.சி. சுரங்கம் பாதுகாக்கப்பட்ட பகுதியாகும். அந்த இடத்தில் பல்வேறு விபத்துகள் நடைபெற்றுள்ளது. சினிமா படப்பிடிப்பு நடத்துவதற்கு அங்கு அனுமதி கொடுத்ததே தவறாகும். அதனால்தான் அந்த இடத்தில் சினிமா படப்பிடிப்பு நடத்தக்கூடாது என்று பா.ஜனதாவினர் எதிர்ப்பு தெரிவிக்கின்றனர். ஒரு நபருக்காகவோ, படத்துக்காகவோ நாங்கள் எதிர்க்கவில்லை. பாதுகாப்பு கருதி தான் எதிர்க்கிறோம். மேலும் அந்த படத்துக்கு விளம்பரம் செய்ய நான் தயார் இல்லை என்றார்.

Related Tags :
Next Story