காரைக்காலில் பொதுமக்கள் பார்வைக்கு இறுதி வாக்காளர் பட்டியல்


காரைக்காலில் பொதுமக்கள் பார்வைக்கு இறுதி வாக்காளர் பட்டியல்
x
தினத்தந்தி 10 Feb 2020 5:10 AM IST (Updated: 10 Feb 2020 5:10 AM IST)
t-max-icont-min-icon

காரைக்காலில் இறுதி வாக்காளர் பட்டியல் பொதுமக்கள் பார்வைக்கு வைக்கப்பட்டுள்ளது.

காரைக்கால்,

இந்திய தேர்தல் ஆணையத்தின் அறிவுறுத்தல் படி 1.1.2020-ந் தேதியை தகுதி நாளாகக் கொண்டு வாக்காளர் இறுதி பட்டியல் தயாரிக்கப்பட்டது. இப்பட்டியலை காரைக்கால் மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் மாவட்ட தேர்தல் அதிகாரியும், கலெக்டருமான விக்ராந்த்ராஜா வெளியிட்டார்.

அங்கீகரிக்கப்பட்ட அரசியல் கட்சி பிரதிநிதிகள் வாக்காளர் இறுதி பட்டியலை பெற்றுக்கொண்டனர். இந்த நிகழ்ச்சியில், மாவட்ட துணை ஆட்சியர் ஆதர்ஷ், குடிமைப் பொருள் வழங்கல் துணை இயக்குனர் ரேவதி, துணை வாக்காளர் பதிவு அதிகாரிகள் பொய்யாதமூர்த்தி, முத்து உள்ளிட்ட பலர் கலந்துகொண்டனர்.

ஒருவாரத்தில்...

இறுதி வாக்காளர் பட்டியலில் நெடுங்காடு தொகுதியில் 30,618 வாக்காளர்களும், திருநள்ளாறு தொகுதியில் 30,292 வாக்காளர்களும், காரைக்கால் வடக்கு தொகுதியில் 34,629 வாக்காளர்களும், தெற்கு தொகுதியில் 30,764 வாக்காளர்களும், நிரவி-திருமலைராயன் பட்டினம் தொகுதியில் 30,448 வாக்காளர்களும் உள்ளனர்.

அந்தந்த வாக்குச் சாவடியில் வாக்காளர் இறுதிப்பட்டியல் வைக்கப்பட்டுள்ளது. இதனை பொதுமக்கள் பார்வையிட்டு அதில் திருத்தங்கள் இருந்தால் ஒருவாரத்திற்குள் திருத்தங்கள் செய்து கொள்ளலாம்.

இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

Next Story