ஆட்டோ டிரைவர்கள் ஆர்ப்பாட்டம்


ஆட்டோ டிரைவர்கள் ஆர்ப்பாட்டம்
x
தினத்தந்தி 11 Feb 2020 4:00 AM IST (Updated: 11 Feb 2020 1:18 AM IST)
t-max-icont-min-icon

தொழிலாளர் சங்கத்தின் சார்பாக கண்டன ஆர்ப்பாட்டம் பெரம்பலூர் பழைய பஸ் நிலையம் அருகே உள்ள காந்தி சிலை முன்பு நேற்று மாலை நடந்தது.

பெரம்பலூர்,

பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி மாவட்ட சி.ஐ.டி.யு. அனைத்து வகை ஆட்டோ டிரைவர்கள், தொழிலாளர் சங்கத்தின் சார்பாக கண்டன ஆர்ப்பாட்டம் பெரம்பலூர் பழைய பஸ் நிலையம் அருகே உள்ள காந்தி சிலை முன்பு நேற்று மாலை நடந்தது. இதற்கு சங்கத்தின் மாவட்ட துணை செயலாளர் மல்லீஸ்குமார் தலைமை தாங்கினார். மாவட்ட செயலாளர் ரெங்கநாதன், தலைவர் சண்முகம், பொருளாளர் சிவசங்கர் ஆகியோர் முன்னிலை வகித்தனர். இதில் சிறப்பு அழைப்பாளர்களாக கலந்துகொண்ட சி.ஐ.டி.யு. தொழிற்சங்கத்தின் மாவட்ட தலைவர் அகஸ்டின், செயலாளர் துரைசாமி ஆகியோர் கண்டன உரையாற்றினர். ஆர்ப்பாட்டத்தில் கலந்து கொண்டவர்கள் மதுரை மாவட்டத்தை சேர்ந்த ஆட்டோ டிரைவரான அரிச்சந்திரனை தற்கொலைக்கு தூண்டிய போலீசாரை கண்டித்தும், அரிச்சந்திரன் குடும்பத்திற்கு தமிழக அரசு நிவாரண நிதியும், அவரது குடும்பத்தில் ஒருவருக்கு அரசு வேலையும் வழங்க வேண்டும் என்றும், வேலையின்மைக்கும், விலை உயர்வுக்கும் தீர்வு காணாத மத்திய அரசின் பட்ஜெட்டை கண்டித்தும் பல்வேறு கோ‌‌ஷங்களை எழுப்பினர்.

Next Story