மாவட்ட செய்திகள்

நீண்டநாட்களாக காதலித்து விட்டு கல்லூரி மாணவியை திருமணம் செய்ய மறுத்த வாலிபர் கைது + "||" + College student Refusing to get married The youth was arrested

நீண்டநாட்களாக காதலித்து விட்டு கல்லூரி மாணவியை திருமணம் செய்ய மறுத்த வாலிபர் கைது

நீண்டநாட்களாக காதலித்து விட்டு கல்லூரி மாணவியை திருமணம் செய்ய மறுத்த வாலிபர் கைது
நீண்டநாட்களாக காதலித்துவிட்டு கல்லூரி மாணவியை திருமணம் செய்ய மறுத்த வாலிபரை போலீசார் கைது செய்தனர்.
குளித்தலை,

கரூர் மாவட்டம் கடவூர் அருகே உள்ள செங்குளம் பகுதியை சேர்ந்தவர் தர்மலிங்கம் மகன் லட்சுமணன் (வயது 26). இவர் திருப்பூரில் உள்ள தனியார் நிறுவனத்தில் வேலை செய்து வருகிறார்.

இவருக்கும் கடவூர் பகுதியை சேர்ந்த கல்லூரி மாணவி ஒருவருக்கும் பழக்கம் ஏற்பட்டது, இந்த பழக்கம் நாளடைவில் காதலாக மாறியது. இருவரும் நீண்டநாட்களாக காதலித்து வந்தனர்.


இந்த நிலையில் தன்னை திருமணம் செய்து கொள்ளுமாறு அந்தப் பெண் லட்சுமணனிடம் கூறியுள்ளார். அதற்கு அவர் மறுத்ததாக கூறப்படுகிறது. இது குறித்து அந்தப் பெண் குளித்தலை அனைத்து மகளிர் போலீஸ் நிலையத்தில் புகார் செய்தார். அதன் பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து, லட்சுமணனை கைது செய்தனர். பின்னர், அவர் குளித்தலை குற்றவியல் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டார்.

தொடர்புடைய செய்திகள்

1. கல்லூரி மாணவியை கற்பழித்து கொன்ற வழக்கில் கைதான 2 வாலிபர்களும் குற்றவாளிகள் - கோர்ட்டு உத்தரவு
கல்லூரி மாணவியை கற்பழித்து கொன்ற வழக்கில் கைதான 2 வாலிபர்களும் குற்றவாளிகள் என கூறிய சிக்கமகளூரு கோர்ட்டு நீதிபதி, அவர்களுக்கான தண்டனை விவரம் வருகிற 9-ந்தேதி அறிவிக்கப்படும் என தெரிவித்தார்.