கஞ்சா கடத்திய வாலிபர் கைது


கஞ்சா கடத்திய வாலிபர் கைது
x
தினத்தந்தி 13 Feb 2020 3:00 AM IST (Updated: 12 Feb 2020 6:08 PM IST)
t-max-icont-min-icon

கஞ்சா கடத்திய வாலிபர் கைது செய்யப்பட்டார்.

வாணாபுரம், 

தச்சம்பட்டு போலீஸ் இன்ஸ்பெக்டர் மணிமாறன் மற்றும் போலீசார் வேலையாம்பாக்கம் கூட்டு ரோட்டில் வாகன தணிக்கையில் ஈடுபட்டிருந்தனர். அப்போது அந்த வழியாக மோட்டார் சைக்கிளில் வந்த வாலிபரை பிடித்து சோதனை செய்ததில் மோட்டார் சைக்கிளில் 100 கிராம் கஞ்சா பொட்டலம் இருந்தது தெரியவந்தது.

இதனையடுத்து அந்த வாலிபரிடம் விசாரணை நடத்தியதில் வேலையாம்பாக்கம் பகுதி கலர் கொட்டாயை சேர்ந்த குபேரன் என்பவரது மகன் மணிவேல் (வயது 33) என்பதும், கஞ்சா வாங்கி வந்து விற்பனை செய்வதும் தெரியவந்தது. இதனையடுத்து மணிவேலை போலீசார் கைது செய்தனர்.

Next Story