300-க்கும் மேற்பட்ட ரெயில் பயணிகளிடம் திருடிய அண்ணன்-தம்பி கைது
300-க்கும் மேற்பட்ட ரெயில் பயணிகளிடம் திருடிய அண்ணன்-தம்பி பிடிபட்டனர்.
மும்பை,
மும்பை மத்திய ரெயில்வே வழித்தடத்தில் பயணிகள் கொண்டு வரும் உடைமைகள் திருட்டு போவதாக போலீசாருக்கு அடிக்கடி புகார் வந்தது. இந்த புகாரின் பேரில் போலீசார் விசாரணை மேற்கொண்டனர். மேலும் கண்காணிப்பு கேமரா காட்சிகளை ஆய்வு செய்தனர். இதில் வடலாவை சேர்ந்த கியான் சிங் (வயது30) என்பவர் இதுபோன்ற திருட்டில் ஈடுபட்டு வந்தது தெரியவந்தது.
இதையடுத்து போலீசார் அவரை கைது செய்தனர். மேலும் அவரது வீட்டில் நடத்திய சோதனையில் 5 திருட்டு மடிக்கணினிகள் சிக்கின. அவற்றை போலீசார் பறிமுதல் செய்தனர்.
மேலும் போலீசார் நடத்திய விசாரணையில் கியான் சிங்கின் தம்பி ராஜ்குமார் (26) என்பவருக்கும் இந்த திருட்டில் தொடர்பு இருப்பது தெரியவந்தது. இதையடுத்து போலீசார் அவரையும் கைது செய்தனர்.
இவர்கள் இருவரும் சேர்ந்து 300-க்கும் மேற்பட்ட பயணிகளின் உடைமைகளை திருடி ராஜஸ்தானில் விற்று பணமாக்கியது தெரியவந்தது.

Related Tags :
Next Story