போலீசார் மீது டிராக்டர் ஏற்றி கொல்ல முயற்சி: வாலிபர் குண்டர் சட்டத்தில் கைது
போலீசார் மீது டிராக்டர் ஏற்றி கொல்ல முயற்சி செய்த வாலிபர் குண்டர் சட்டத்தில் கைது செய்யப்பட்டுள்ளார்.
சிப்காட் (ராணிப்பேட்டை),
சிப்காட்டை அடுத்த சீக்கராஜபுரம் மோட்டூர் பகுதியை சேர்ந்தவர் சிதம்பரம் (வயது 29). இவர், டிராக்டரில் மணல் கடத்தி வந்த போது, சிப்காட் போலீஸ் சப்–இன்ஸ்பெக்டர் ஜெயக்குமார் மற்றும் போலீசார் தடுக்க முயன்றனர். அப்போது போலீசார் மீது டிராக்டரை ஏற்றி கொல்ல முயன்றுள்ளார். இதையடுத்து சிப்காட் போலீசார் சிதம்பரத்தை கைது செய்து சிறையில் அடைத்தனர்.
இந்த நிலையில் சிதம்பரத்தை குண்டர் சட்டத்தில் அடைக்க ராணிப்பேட்டை மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு மயில்வாகனன், கலெக்டர் திவ்யதர்ஷினிக்கு பரிந்துரை செய்தார். அதைத் தொடர்ந்து கலெக்டர் திவ்யதர்ஷினி, சிதம்பரத்தை குண்டர் சட்டத்தில் கைது செய்ய உத்தரவிட்டார்.
Related Tags :
Next Story