கோவில்பட்டி யூனியன் அலுவலகத்தை பொதுமக்கள் முற்றுகை: பொது சுகாதார வளாகம் கட்ட கோரிக்கை


கோவில்பட்டி யூனியன் அலுவலகத்தை பொதுமக்கள் முற்றுகை: பொது சுகாதார வளாகம் கட்ட கோரிக்கை
x
தினத்தந்தி 18 Feb 2020 3:00 AM IST (Updated: 17 Feb 2020 11:06 PM IST)
t-max-icont-min-icon

பொது சுகாதார வளாகம் கட்ட வலியுறுத்தி, கோவில்பட்டி யூனியன் அலுவலகத்தை பொதுமக்கள் முற்றுகையிட்டனர்.

கோவில்பட்டி, 

கோவில்பட்டி அருகே உள்ள வில்லிசேரி பஞ்சாயத்து துணை தலைவர் காசிராஜன் தலைமையில் அப்பகுதி மக்கள் நேற்று கோவில்பட்டி யூனியன் அலுவலகத்தை முற்றுகையிட்டனர். பின்னர் அவர்கள், யூனியன் அலுவலகத்தில் கோரிக்கை மனு வழங்கினர்.அந்த மனுவில், தங்களது கிராமத்தில் உள்ள பொது சுகாதார வளாக கட்டிடம் பழுதடைந்த நிலையில் உள்ளது. எனவே அதனை அகற்றி விட்டு, அங்கு புதிதாக பொது சுகாதார வளாகம் கட்டுவதற்கு ஏற்பாடு செய்யப்பட்டது.

ஆனால் சிலர் அந்த இடத்தை ஆக்கிரமிக்கும் வகையில், அங்கு பொது சுகாதார வளாகம் கட்டுவதற்கு எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர்.

எனவே மக்களின் சுகாதாரத்தை பாதுகாக்கும் வகையில், அங்கு பொது சுகாதார வளாகம் கட்டுவதற்கு வில்லிசேரி பஞ்சாயத்து நிர்வாகத்துக்கு அனுமதி வழங்க வேண்டும் என்று தெரிவிக்கப்பட்டு இருந்தது. பின்னர் அனைவரும் கலைந்து சென்றனர்.

Next Story