இந்திய ஜனநாயக வாலிபர் சங்கத்தினர் ஆர்ப்பாட்டம்


இந்திய ஜனநாயக வாலிபர் சங்கத்தினர் ஆர்ப்பாட்டம்
x
தினத்தந்தி 18 Feb 2020 10:00 PM GMT (Updated: 18 Feb 2020 1:07 PM GMT)

திருவண்ணாமலையில் இந்திய ஜனநாயக வாலிபர் சங்கத்தினர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

திருவண்ணாமலை, 

இந்திய ஜனநாயக வாலிபர் சங்கம் திருவண்ணாமலை மாவட்டக்குழு சார்பில் பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி கப்பற்படை எழுச்சி தினமான நேற்று ஊர்வலம் மற்றும் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். மாவட்ட தலைவர் சுந்தர் தலைமை தாங்கினார். மாவட்ட செயலாளர் அன்பரசன், மாவட்ட பொருளாளர் சரவணன் உள்பட பலர் கலந்து கொண்டனர். மாநில துணை செயலாளர் நந்தன் கலந்து கொண்டு பேசினார்.

ஊர்வலம் திருவண்ணாமலை வேங்கிக்கால் அண்ணா நுழைவு வாயில் அருகில் தொடங்கி தென்றல் நகர் பஸ் நிறுத்தம் வரை நடந்தது.

அரசு மற்றும் தனியார் வேலைகளில் குறைந்தபட்ச சம்பளம் ரூ.21 ஆயிரம் வழங்க வேண்டும். ஊழல் மையமாக மாறியுள்ள டி.என்.பி.எஸ்.சி.யின் முறைகேடுகளை விசாரித்து நடவடிக்கை எடுக்க வேண்டும். காலியாக உள்ள பணியிடங்களை நிரப்ப வேண்டும். தமிழக இளைஞர்களுக்கு முன்னுரிமை வழங்க வேண்டும். ஓய்வு பெற்றவர்களை மீண்டும் பணியமர்த்தக் கூடாது என்று கோ‌ஷங்கள் எழுப்பினர்.

Next Story