கும்பகோணத்தில் கியாஸ் சிலிண்டருக்கு நாமம் போட்டு நூதன போராட்டம்
கும்பகோணத்தில் கியாஸ் சிலிண்டருக்கு நாமம் போட்டு காங்கிரஸ் கட்சியினர் நூதன போராட்டத்தில் ஈடுபட்டனர்.
கும்பகோணம்,
சமையல் கியாஸ் சிலிண்டருக்கான விலை உயர்வை கண்டித்து கும்பகோணம் காந்தி பூங்கா அருகே நேற்று காங்கிரஸ் கட்சி சார்பில் கியாஸ் சிலிண்டருக்கு நாமம் போட்டு நூதன போராட்டம் நடந்தது. போராட்டத்துக்கு காங்கிரஸ் மாவட்ட தலைவர் லோகநாதன் தலைமை தாங்கினார்.
மத்திய அரசு சமையல் கியாஸ் சிலிண்டருக்கும், நெல்லுக்கும் கட்டுப்படியான விலை நிர்ணயம் செய்ய வேண்டும். குடியுரிமை திருத்த சட்டத்தை திரும்பப்பெற வேண்டும் என்பன உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகள் ஆர்ப்பாட்டத்தில் வலியுறுத்தப்பட்டன.
நிர்வாகிகள்
இதில் மாவட்ட செயலாளர் அய்யப்பன், வட்டார தலைவர்கள் பாலதண்டாயுதம், சிவராமன், அசோகன், பிரதாபன், ஷமீல்அகமது, மாவட்ட துணை தலைவர் குருசாமி, மகிளா காங்கிரஸ் மாநில செயலாளர் நூருல்மரியா மற்றும் நிர்வாகிகள் திரளாக கலந்து கொண்டு கோரிக்கைகளை வலியுறுத்தி கோஷம் எழுப்பினர்.

Related Tags :
Next Story