சிங்கப்பெருமாள் கோவில் அருகே பஸ்-கார் மோதல்; 5 மாணவ- மாணவிகள் காயம்
சிங்கப்பெருமாள் கோவில் அருகே பஸ்- கார் மோதிய விபத்தில் 5 மாணவ- மாணவிகள் காயம் அடைந்தனர்.
வண்டலூர்,
செங்கல்பட்டில் உள்ள தனியார் மெட்ரிக் பள்ளியில் இருந்து நேற்று முன்தினம் மாலை மாணவ-மாணவிகளை ஏற்றிக்கொண்டு கார் ஒன்று சிங்கப்பெருமாள்கோவில் நோக்கி சென்று கொண்டிருந்தது. திருத்தேரி அருகே உள்ள வளைவில் கார் திரும்பும் போது சென்னையில் இருந்து திருவண்ணாமலை நோக்கி சென்றுக்கொண்டிருந்த அரசு பஸ் கண் இமைக்கும் நேரத்தில் கார் மீது மோதியது.
இதில் காரில் இருந்த மாணவ-மாணவிகள் ஸ்ரீமதி (வயது 10), தீபக்(6), தர்ஷ்சன்(7), மோகனப்பிரியா (6), மூர்த்தி (7) ஆகியோர் படுகாயம் அடைந்தனர். அவர்களை உடனடியாக அக்கம்பக்கத்தினர் மீட்டு அருகில் உள்ள தனியார் ஆஸ்பத்திரியில் சிகிச்சைக்காக சேர்த்தனர்.
இந்த விபத்து குறித்து மறைமலைநகர் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Related Tags :
Next Story