கோபால்பட்டியில், தென்னை நார் தொழிற்சாலையில் தீ
கோபால்பட்டியில் தென்னை நார் தொழிற்சாலையில் தென்னை நார் கழிவுகளில் திடீரென்று தீப்பிடித்தது.
கோபால்பட்டி,
கோபால்பட்டியில் வடுகபட்டி பிரிவு அருகே தென்னை நார் தொழிற்சாலை ஒன்று உள்ளது. இந்நிலையில் நேற்று மதியம் 1 மணியளவில் தொழிற்சாலையின் ஒரு பகுதியில் வைக்கப்பட்டிருந்த தென்னை நார் கழிவுகளில் திடீரென்று தீப்பிடித்தது.
உடனே தொழிலாளர்கள் தண்ணீரை ஊற்றி தீயை அணைக்க முயன்றனர். ஆனால் தீ மளமளவென பரவி தென்னை நார் குவியலில் பிடித்தது. இதுகுறித்து நத்தம் தீயணைப்பு நிலையத்திற்கு தகவல் கொடுக்கப்பட்டது. அதன்பேரில் தீயணைப்பு அலுவலர் லட்சுமணன் தலைமையில் வீரர்கள் விரைந்து சென்று சுமார் ஒரு மணி நேரம் போராடி தீயை அணைத்தனர்.
இதில் தொழிற்சாலையில் இருந்த எந்திரங்கள் எதுவும் சேதமடையவில்லை. தொழிற்சாலையில் மின்கசிவு காரணமாக தீ விபத்து ஏற்பட்டு இருக்கலாம் என்று தீயணைப்புத்துறையினர் தெரிவித்தனர்.
Related Tags :
Next Story