குடியுரிமை திருத்த சட்டத்துக்கு எதிராக முஸ்லிம்கள் விடிய, விடிய போராட்டம் நாகர்கோவிலில் நடந்தது
நாகர்கோவிலில் குடியுரிமை திருத்த சட்டத்துக்கு எதிராக முஸ்லிம்கள் விடிய, விடிய போராட்டம் நடத்தினர்.
நாகர்கோவில்,
நாகர்கோவில் இளங்கடையில் பல்வேறு முஸ்லிம் அமைப்புகள் சார்பில் 24 மணி நேர போராட்டம் நேற்று முன்தினம் காலை 10 மணிக்கு தொடங்கியது.
இந்த போராட்டமானது மத்திய அரசின் குடியுரிமை திருத்த சட்டத்தை வாபஸ்பெற கோரி நடைபெற்றது. இளங்கடையில் சாலை ஓரம் ஷெட் அமைத்து போராட்டத்தில் ஈடுபட்டார்கள்.
இதில் பல்வேறு பகுதிகளில் இருந்தும் ஏராளமான முஸ்லிம்கள் கலந்து கொண்டனர். பின்னர் விடிய, விடிய போராட்டம் நடந்தது. போராட்ட களத்திலேயே அனைவரும் இருந்தனர். அப்போது குடியுரிமை சட்டத்துக்கு எதிராக கோஷங்கள் எழுப்பப்பட் டன.
நிறைவு
போராட்டத்தில் பங்கேற்ற அனைவருக்கும் அங்கேயே சமையல் செய்து பரிமாறப்பட்டது.
இந்த நிலையில் நேற்று காலை 10 மணிக்கு போராட்டம் நிறைவின் போது பச்சை தமிழகம் கட்சி நிறுவனர் சுப.உதயகுமார் கலந்து கொண்டு பேசினார். அதன்பிறகு போராட்டமானது நிறைவு பெற்றது. இதனையடுத்து அனைவரும் போராட்ட களத்தில் இருந்து தங்களது வீடுகளுக்கு புறப்பட்டனர்.

Related Tags :
Next Story