மாவட்ட செய்திகள்

சாவில் சந்தேகம் இருப்பதாக போலீசில் புகார்: மூதாட்டி உடல் தோண்டி எடுப்பு திருக்காட்டுப்பள்ளி அருகே பரபரப்பு + "||" + Police report suspicion of death: Excavation near Muthathi Body Digging School

சாவில் சந்தேகம் இருப்பதாக போலீசில் புகார்: மூதாட்டி உடல் தோண்டி எடுப்பு திருக்காட்டுப்பள்ளி அருகே பரபரப்பு

சாவில் சந்தேகம் இருப்பதாக போலீசில் புகார்: மூதாட்டி உடல் தோண்டி எடுப்பு திருக்காட்டுப்பள்ளி அருகே பரபரப்பு
திருக்காட்டுப்பள்ளி அருகே சாவில் சந்தேகம் இருப்பதாக புகார் கொடுக்கப்பட்டதால் மூதாட்டி உடலை போலீசார் தோண்டி எடுத்ததால் பரபரப்பு ஏற்பட்டது.
திருக்காட்டுப்பள்ளி,

தஞ்சை மாவட்டம் திருக்காட்டுப்பள்ளியை அடுத்துள்ள செம்பியன்கிளரி காலனி தெருவை சேர்ந்தவர் கண்ணையன். விவசாய கூலி தொழிலாளி. இவருடைய தாயார் பழனியாயி (வயது70). இவர் மனநிலை சரியில்லாதவர் என கூறப்படுகிறது.


இந்த நிலையில் கடந்த 21-ந்தேதி செம்பியன்கிளரி கிராமத்தின் அருகே உள்ள வெண்ணாற்றில் மூதாட்டி பழனியாயி இறந்து கிடப்பதாக அவரது மகன் கண்ணையனுக்கு தகவல் கிடைத்துள்ளது. அதன் பேரில் அங்கு சென்ற அவர், அதே இடத்தில் தனது தாயார் உடலை உறவினர்கள் மற்றும் கிராமத்தினருக்கு தெரியாமல் புதைத்து விட்டதாக தெரிகிறது.

சாவில் சந்தேகம்

இதுபற்றி அறிந்த கண்ணையனின் உறவினர் அங்குபாப்பா (48) என்பவர் தோகூர் போலீசில் புகார் கொடுத்தார். அந்த புகாரில் தனது உறவினர் பழனியாயியின் சாவில் சந்தேகம் உள்ளது.

எனவே புதைக்கப்பட்ட அவரது உடலை தோண்டி எடுத்து விசாரணை நடத்த வேண்டும் என்று தெரிவித்திருந்தார்.அதன்பேரில் தோகூர் போலீசார் வழக்குப்பதிவு செய்தனர்.

உடல் தோண்டி எடுப்பு

இதையடுத்து செம்பியன்கிளரி கிராமத்தின் அருகே உள்ள வெண்ணாற்றுக்கு போலீஸ் இன்ஸ்பெக்டர் கென்னடி, சப்-இன்ஸ்பெக்டர் கருணாகரன் மற்றும் போலீசார் சென்று பூதலூர் தாசில்தார் சிவக்குமார் முன்னிலையில் பழனியாயி உடலை நேற்று தோண்டி எடுத்தனர். அவரது உடல் அழுகிய நிலையில் இருந்ததால் திருக்காட்டுப்பள்ளி அரசு மருத்துவமனைடாக்டர்கள் விமல்ராஜ், சரண்யா ஆகியோர் அங்கேயே பிரேத பரிசோதனை செய்தனர்.

பின்னர் உடலை அவரது உறவினர்களிடம் ஒப்படைத்தனர். பிரேத பரிசோதனை அறிக்கை கிடைத்த பிறகே நடவடிக்கை எடுக்கப்படும் என போலீசார் தெரிவித்தனர். பழனியாயி உடலை தோண்டி எடுக்கப்படும் தகவல் அறிந்த பொதுமக்கள் அந்த பகுதியில் திரண்டதால் பரபரப்பு ஏற்பட்டது.

தொடர்புடைய செய்திகள்

1. பொம்மிடி அருகே கிணற்றில் பெண் பிணம் சாவில் சந்தேகம் என தந்தை போலீசில் புகார்
பொம்மிடி அருகே கிணற்றில் பெண் பிணமாக மிதந்தார். மகள் சாவில் சந்தேகம் உள்ளதாக தந்தை ேபாலீசில் புகார் செய்துள்ளார்.
2. தாயிடம் கத்தியை காட்டி இளம்பெண்ணை கடத்தியதாக புகார்: கொளத்தூர்மணி உள்பட 4 பேர் மீது வழக்கு
தாயிடம் கத்தியை காட்டி இளம்பெண்ணை கடத்தியதாக எழுந்த புகாரை தொடர்ந்து கொளத்தூர் மணி உள்பட 4 பேர் மீது பவானி போலீசார் வழக்கு தொடர்ந்துள்ளார்கள்.
3. ரூ.6 லட்சம் மோசடி செய்ததாக சினிமா நடிகர் உள்பட 2 பேர் மீது புகார்
சினிமா கூப்பனை கொடுத்து ரூ.6 லட்சம் மோசடி செய்த சினிமா நடிகர் உள்பட 2 பேர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று போலீஸ் சூப்பிரண்டு அலுவலகத்தில், எலெக்ட்ரீசியன் மனு கொடுத்தார்.
4. கட்டப்பஞ்சாயத்து செய்வதில் போலீஸ் அதிகாரிகளுடன் தாதாக்கள் கூட்டு சட்டமன்ற மதிப்பீட்டு குழு புகார்
போலீஸ் அதிகாரிகளுடன் தாதாக்கள் கூட்டு சேர்ந்து கட்டப்பஞ்சாயத்து செய்வதாக சட்டமன்ற மதிப்பீட்டு குழு புகார் தெரிவித்தது.
5. ஜவுளி நிறுவனம் நிலுவைத்தொகை வழங்காமல் மோசடி நூல் உற்பத்தியாளர்கள் போலீஸ் சூப்பிரண்டிடம் புகார்
பள்ளிபாளையத்தில் ஜவுளி நிறுவனம் நிலுவைத்தொகையை வழங்காமல் மோசடி செய்து இருப்பதாக நூல் உற்பத்தியாளர்கள் போலீஸ் சூப்பிரண்டிடம் புகார் தெரிவித்தனர்.