நெல்லை, தென்காசி மாவட்டங்களில் ஜெயலலிதா பிறந்த நாள் விழா கொண்டாட்டம்
நெல்லை, தென்காசி மாவட்டங்களில் ஜெயலலிதா பிறந்தநாள் விழா கொண்டாடப்பட்டது.
தென்காசி,
தென்காசி மாவட்டம் பாவூர்சத்திரத்தில் ஜெயலலிதா பிறந்தநாள் விழா நேற்று கொண்டாடப்பட்டது. இதையொட்டி பஸ்நிலையம் அருகே அலங்கரித்து வைக்கப்பட்டிருந்த ஜெயலலிதா உருவப்படத்துக்கு, செல்வமோகன்தாஸ் பாண்டியன் எம்.எல்.ஏ. மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார். பின்னர் பொதுமக்களுக்கு இனிப்பு வழங்கினார். நிகழ்ச்சியில் ஒன்றிய செயலாளர் அமல்ராஜ் மற்றும் பலர் கலந்துகொண்டனர்.
தென்காசியில் அ.தி.மு.க. சார்பில் வாய்க்கால் பாலம், அரசு போக்குவரத்து கழக பணிமனை, பூக்கடை பஜார், பழைய பஸ் நிலையம் ஆகிய இடங்களில் ஜெயலலிதாவின் உருவப்படம் அலங்கரித்து வைக்கப்பட்டிருந்தது. இதேபோல் மேலகரம் பஸ் நிறுத்தம், குடியிருப்பு பஸ்நிறுத்தம், குற்றாலம் அண்ணாசிலை, இலஞ்சி சவுக்கை முக்கு ஆகிய பகுதிகளிலும் ஜெயலலிதாவின் உருவப்படம் வைக்கப்பட்டிருந்தது. இந்த பகுதிகளில் செல்வமோகன்தாஸ் பாண்டியன் எம்.எல்.ஏ. அ.தி.மு.க. கொடி ஏற்றி பொதுமக்களுக்கு இனிப்பு வழங்கினார்.
மேலும் தென்காசி நகர அ.தி.மு.க. சார்பில் நன்னகரத்தில் ஆதரவற்ற குழந்தைகள் இல்லத்திற்கு ஒரு மாதத்திற்கு தேவையான உணவுப் பொருட்கள் வழங்கப்பட்டது. நிகழ்ச்சிகளில் மாவட்ட பொருளாளர் சண்முகசுந்தரம், தென்காசி நகர செயலாளர் சுடலை, மேலகரம் செயலாளரும் அரசு வக்கீலுமான கார்த்திக் குமார், குற்றாலம் நகர செயலாளர் கணேஷ் தாமோதரன், தென்காசி-குற்றாலம் கூட்டுறவு வீட்டு வசதி சங்க தலைவர் சுரேஷ், இலஞ்சி முன்னாள் நகர பஞ்சாயத்து தலைவர் காத்தவராயன், மாவட்ட அண்ணா தொழிற்சங்க துணைச் செயலாளர் நெல்லை முகிலன் உள்பட பலர் கலந்து கொண்டனர்.
ஜெயலலிதா பிறந்தநாளை முன்னிட்டு நெல்லை மாவட்டம் நாங்குநேரி, திசையன்விளை அரசு ஆஸ்பத்திரிகளில் பிறந்த குழந்தைகளுக்கு மாவட்ட ஜெயலலிதா பேரவை தலைவர் வக்கீல் ஏ.கே.சீனிவாசன் தங்க மோதிரம் அணிவித்தார். நாங்குநேரி ஏமன்குளம் ஆதரவற்றோர் இல்லங்களுக்கு உணவு வழங்கினார்.
நிகழ்ச்சியில் மாவட்ட ஜெயலலிதா பேரவை செயலாளர் நடராஜன், நாங்குநேரி ஒன்றிய செயலாளர் விஜயகுமார், நாங்குநேரி நகர செயலாளர் பரமசிவன், பனை வெல்ல கூட்டுறவு சங்க தலைவர் தர்மசீலன், ஒன்றிய எம்.ஜி.ஆர். மன்ற செயலாளர் ஜெயபால், உருமன்குளம் பஞ்சாயத்து முன்னாள் தலைவர் பொன் இசக்கி உள்பட பலர் கலந்துகொண்டனர்.
நாங்குநேரி சட்டமன்ற தொகுதி சார்பில் பல்வேறு ஊர்களில் உள்ள அரசு ஆஸ்பத்திரிகளில் நேற்று பிறந்த 20 குழந்தைகளுக்கு ரெட்டியார்பட்டி நாராயணன் எம்.எல்.ஏ. தங்க மோதிரம் அணிவித்தார். மேலும் தாய்மார்களுக்கு அம்மா பரிசு பெட்டகத்தையும் வழங்கினார்.
நிகழ்ச்சியில் மாவட்ட எம்.ஜி.ஆர். மன்ற இணைச் செயலாளர் சிந்தாமணி ராமசுப்பு, ஒன்றிய பேரவை செயலாளர் அசோக்குமார், மூலைக்கரைப்பட்டி நகர எம்.ஜி.ஆர். மன்ற தலைவர் முத்துராமலிங்கம், மாநில திட்டக்குழு உறுப்பினர் வி.ஓ.கணபதி, முன்னாள் ஒன்றிய கவுன்சிலர்கள் ஞானமுத்து, சிவா உள்பட பலர் கலந்துகொண்டனர்.
Related Tags :
Next Story