பெண் குழந்தைகள் பாதுகாப்பு தினத்தையொட்டி மாணவிகளுடன், கலெக்டர் ஷில்பா கலந்துரையாடல்


பெண் குழந்தைகள் பாதுகாப்பு தினத்தையொட்டி மாணவிகளுடன், கலெக்டர் ஷில்பா கலந்துரையாடல்
x
தினத்தந்தி 25 Feb 2020 11:00 PM GMT (Updated: 25 Feb 2020 4:21 PM GMT)

பெண் குழந்தைகள் பாதுகாப்பு தினத்தையொட்டி பள்ளி மாணவிகளுடன், கலெக்டர் ஷில்பா கலந்துரையாடல் நடத்தினார்.

நெல்லை, 

பெண் குழந்தைகள் பாதுகாப்பு தினத்தையொட்டி பள்ளி மாணவிகளுடன், கலெக்டர் ஷில்பா கலந்துரையாடல் நடத்தினார்.

கலந்துரையாடல் 

பாளையங்கோட்டையில் ஜாய்பவன் இல்லத்தில் உள்ள பள்ளி மாணவிகள், குழந்தைகளோடு மாநில பெண் குழந்தைகள் பாதுகாப்பு தினத்தை முன்னிட்டு கலெக்டர் ஷில்பா ஒன்றாக அமர்ந்து கலந்துரையாடி கல்வியில் சிறந்து விளங்க ஆலோசனைகளை வழங்கினார்.

அப்போது அவர் கூறியதாவது:–

தமிழக முன்னாள் முதல்–அமைச்சர் ஜெயலலிதா பிறந்த தினமான பிப்ரவரி 24–ந் தேதியை மாநில பெண் குழந்தைகள் பாதுகாப்பு தினமாக முதல்–அமைச்சர் எடப்பாடி பழனிசாமி அறிவித்து உள்ளார். இதன்படி கல்வி நிலையங்களில், பெண் குழந்தைகள் இல்லங்களில் பல்வேறு விழிப்புணர்வு நிகழ்ச்சிகள் நடத்தப்பட்டு வருகிறது. அதன் அடிப்படையில் உங்களோடு நேரில் அமர்ந்து கலந்துரையாடுவதில் மகிழ்ச்சியடைகிறேன்.

உறுதிமொழி 

தமிழக அரசு கல்விக்காக அதிக நிதி ஒதுக்கீடு செய்து பல திட்டங்களை செயல்படுத்தி வருகிறது. இந்த வாய்ப்புகளை முறையாக பயன்படுத்தி கல்வியில் உயர வேண்டும்.

இவ்வாறு அவர் கூறினார்.

முன்னதாக பெண் குழந்தைகள் பாதுகாப்பு உறுதிமொழி எடுக்கப்பட்டது. இந்த நிகழ்ச்சியில் குழந்தைகள் பாதுகாப்பு நலக்குழு தலைவர் சந்திரகுமார், குழந்தைகள் பாதுகாப்பு நலக்குழு உறுப்பினர்கள் விஸ்வநாதன், டாக்டர் வைகுண்டலட்சுமி, மாவட்ட நன்னடத்தை அலுவலர் ஜோசியாராஜன் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

Next Story