கே.பி.பி.பாஸ்கர் எம்.எல்.ஏ. தாயார் மறைவு: குடும்பத்தினருக்கு எடப்பாடி பழனிசாமி நேரில் ஆறுதல்
கே.பி.பி.பாஸ்கர் எம்.எல்.ஏ. தாயார் பழனியம்மாள் மறைவையொட்டி அவரது குடும்பத்தினருக்கு, முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி நேற்று நேரில் ஆறுதல் கூறினார்.
நாமக்கல்,
நாமக்கல் எம்.எல்.ஏ.வாகவும், நகர அ.தி.மு.க. செயலாளராகவும் இருந்து வருபவர் கே.பி.பி.பாஸ்கர். இவரது தாயார் பழனியம்மாள் (வயது 70). இவர் கடந்த 20-ந் தேதி உடல் நலக்குறைவு ஏற்பட்டு காலமானார்.
அவரது மறைவையொட்டி நாமக்கல் ராமாபுரம்புதூர் பகுதியில் உள்ள எம்.எல்.ஏ.வின் வீட்டிற்கு நேற்று வந்த முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி வந்தார். அங்கு அலங்கரித்து வைக்கப்பட்டிருந்த பழனியம்மாளின் உருவப்படத்திற்கு மலர்தூவி அஞ்சலி செலுத்தினார். பின்னர் கே.பி.பி.பாஸ்கர் எம்.எல்.ஏ. மற்றும் அவரது குடும்பத்தினருக்கு ஆறுதல் கூறினார்.
போலீஸ் பாதுகாப்பு
அப்போது மின்சாரம், மதுவிலக்கு மற்றும் ஆயத்தீர்வைத்துறை அமைச்சர் தங்கமணி, சமூகநலன் மற்றும் சத்துணவு திட்டத்துறை அமைச்சர் டாக்டர் சரோஜா, போக்குவரத்து துறை அமைச்சர் எம்.ஆர்.விஜயபாஸ்கர், நாமக்கல் கலெக்டர் மெகராஜ், சந்திரசேகரன் எம்.எல்.ஏ., அ.தி.மு.க. மாவட்ட அவைத்தலைவர் பி.ஆர்.சுந்தரம், பொருளாளர் டி.எல்.எஸ்.காளியப்பன், நகராட்சி முன்னாள் துணைத்தலைவர் சேகர், மாவட்ட முன்னாள் ஊராட்சிக்குழு உறுப்பினர் மயில் சுதந்திரம், பொதுக்குழு உறுப்பினர் கோபிநாத் மற்றும் அ.தி.மு.க. நிர்வாகிகள் பலர் உடன் இருந்தனர்.
இதையொட்டி மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு அருளரசு தலைமையில் அங்கு பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டு இருந்தது.

Related Tags :
Next Story