திருப்பூரில் வாக்குப்பதிவு எந்திரங்கள் வைக்க பாதுகாப்பு அறை
திருப்பூரில் வாக்குப்பதிவு எந்திரங்கள் வைக்க பாதுகாப்பு அறைக்கான கட்டுமான பணியை கலெக்டர் விஜயகார்த்திகேயன் தொடங்கிவைத்தார்.
திருப்பூர்,
திருப்பூர் மாவட்டத்தில் உள்ள தாராபுரம், காங்கேயம், அவினாசி, திருப்பூர் (வடக்கு), திருப்பூர் (தெற்கு), பல்லடம், உடுமலை மற்றும் மடத்துக்குளம் ஆகிய 8 சட்டமன்ற தொகுதிகளில், நாடாளுமன்றம் மற்றும் சட்டமன்ற தேர்தல்களில் பயன்படுத்தப்படும் மின்னணு வாக்குப்பதிவு எந்திரங்களை பாதுகாப்பாக வைப்பதற்காக நிரந்தர பாதுகாப்பு அறையினை கட்டுவதற்காக, திருப்பூர் கலெக்டர் அலுவலக பெருந்திட்ட வளாகத்தில் ஒரு ஏக்கர் நிலம் ஒதுக்கீடு செய்யப்பட்டது. இந்த பாதுகாப்பு அறையினை கட்டுவதற்காக இந்திய தேர்தல் ஆணையத்தின் ஒப்புதல் பெறப்பட்டு, சென்னை தலைமை தேர்தல் அலுவலரால், ரூ.4 கோடியே 95 லட்சம் நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டது.
எனவே மின்னணு வாக்குப்பதிவு எந்திரங்களை பாதுகாப்பாக வைப்பதற்காக நிரந்தர பாதுகாப்பு அறையினை, திருப்பூர் மாவட்ட கலெக்டர் அலுவலக பெருந்திட்ட வளாகத்தில் கட்டுவதற்கான பணியினை, மாவட்ட தேர்தல் அலுவலரும், கலெக்டருமான விஜயகார்த்திகேயன் நேற்று தொடங்கி வைத்தார்.
இந்த நிகழ்ச்சியில் மாவட்ட வருவாய் அதிகாரி சுகுமார், திருப்பூர் மாநகராட்சி கமிஷனர் சிவக்குமார், கலெக்டரின் நேர்முக உதவியாளர் (பொது) சாகுல் ஹமீது, திருப்பூர் ஆர்.டி.ஓ. கவிதா, தனி தாசில்தார் (தேர்தல்) முருகதாஸ், திருப்பூர் (தெற்கு) தாசில்தார் சுந்தரம் மற்றும் பலர் கலந்து கொண்டனர்.
Related Tags :
Next Story