பாரத் பெட்ரோலிய நிறுவன குழாய்களை சாலையோரமாக கொண்டு செல்ல வேண்டும் விவசாயிகள் கூட்டத்தில் தீர்மானம்


பாரத் பெட்ரோலிய நிறுவன குழாய்களை சாலையோரமாக கொண்டு செல்ல வேண்டும் விவசாயிகள் கூட்டத்தில் தீர்மானம்
x
தினத்தந்தி 27 Feb 2020 11:15 PM GMT (Updated: 27 Feb 2020 10:52 PM GMT)

பாரத் பெட்ரோலிய நிறுவன குழாய்களை சாலையோரமாக கொண்டு செல்ல வேண்டும் என விவசாயிகள் கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டு உள்ளது.

சென்னிமலை,

பாரத் பெட்ரோலிய நிறுவனம் சார்பில் கோவை இருகூரில் இருந்து கர்நாடக மாநிலம் தேவணகொந்திவரை ஐ.டி.பி.எல். திட்டம் என்ற பெயரில் குழாய்கள் அமைத்து எரிபொருள் கொண்டு செல்லும் பணியை செய்து வருகிறது. இதற்காக குழாய்கள் விவசாய நிலங்கள் வழியாக கொண்டு செல்ல முடிவு செய்யப்பட்டு உள்ளது.

இந்த குழாய்களை விவசாய நிலங்கள் வழியாக கொண்டு செல்லாமல் சாலையோரமாக கொண்டு செல்ல வேண்டும் என விவசாயிகள் கோரிக்கை விடுத்து வருகிறார்கள். மேலும் விவசாய நிலங்கள் வழியாக கொண்டு ெசல்வதற்கு எதிர்ப்பு தெரிவித்து பல்வேறு போராட்டங்களும் நடைபெற்று வருகின்றன.

ஆலோசனை கூட்டம்

இந்த நிலையில் சென்னிமலை ஒன்றியம் பசுவபட்டி, முருங்கத்தொழுவு, குப்பிச்சிபாளையம், எக்கட்டாம்பாளையம் ஆகிய 4 கிராமங்களுக்கு உள்பட்ட விவசாயிகளுக்கு இருகூரில் உள்ள பாரத் பெட்ரோலியம் நிறுவனம் சார்பில் நோட்டீஸ் வழங்கப்பட்டது.

இதைத்தொடர்ந்து இந்த திட்டத்தால் பாதிக்கப்படும் விவசாயிகளின் ஆலோசனை கூட்டம் சென்னிமலையில் நடைபெற்றது. கூட்டத்துக்கு தற்சார்பு விவசாயிகள் சங்க அமைப்பாளர் கி.வே.பொன்னையன் தலைமை தாங்கினார். எஸ்.பொன்னுசாமி (இந்திய கம்யூனிஸ்டு), ஊராட்சி தலைவர்கள் எம்.சதீஷ் (பசுவபட்டி), பொன்னுசாமி (குப்பிச்சிபாளையம்), செல்வராசு (புரட்சிகர இளைஞர் முன்னணி) ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

சாலையோரமாக...

கூட்டத்தில் நிைறவேற்றப்பட்ட தீர்மானங்கள் வருமாறு:-

* கெயில் குழாய் திட்டத்தை சாலைேயாரமாக கொண்டு செல்ல வேண்டும் என முன்னாள் முதல்- அமைச்சர் ஜெயலலிதா உத்தரவிட்டதைபோல், பாரத் பெட்ரோலிய திட்டத்தை சாலையோரமாக கொண்டு செல்ல முதல்- அமைச்சர் எடப்பாடி பழனிசாமி நடவடிக்கை எடுக்க வேண்டும்.

* இந்த திட்டத்தால் பாதிக்கப்படும் 6 மாவட்டங்களையும் ஒருங்கிணைத்து அமைக்கப்பட்டு உள்ள பாரத் பெட்ரோலியத்தின் (ஐ.டி.பி.எல்.) எண்ணெய் குழாய் திட்டத்தால் பாதிக்கப்படும் விவசாயிகள் கூட்டமைப்பு சார்பில் வருகிற 9-ந் தேதி காலை 10 மணி அளவில் சேலம் நில எடுப்பு அதிகாரி அலுவலகம் முன்பு ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டு மனு அளிப்பது.

* இந்த ஆர்ப்பாட்டத்தில் ஏராளமான விவசாயிகள் கலந்து கொள்வது.

மேற்கண்டவை உள்பட பல்வேறு தீர்மானங்கள் நிைறவேற்றப்பட்டன.

இதில் திரளான விவசாயிகள் கலந்து கொண்டனர்.

Next Story