வங்கி முகவரை கடத்தி கொல்ல முயற்சி: பிரபல ரவுடி உள்பட 3 பேர் கைது
ஓசூரில் வங்கி முகவரை கடத்தி கொலை செய்ய முயன்ற பிரபல ரவுடி உள்பட 3 பேரை போலீசார் கைது செய்தனர்.
ஓசூர்,
கிருஷ்ணகிரி மாவட்டம் ஓசூர் மத்திகிரி டைட்டன் டவுன்சிப் ஜெ.பி.டிராங்கிள் லே-அவுட்டை சேர்ந்தவர் வினோத் (வயது 35). வங்கி லோன் முகவர். இவர் கடந்த, 19-ந் தேதி மாலை, மத்திகிரி கூட்ரோட்டில் உள்ள பெட்ரோல் விற்பனை நிலையத்தில், தனது காருக்கு பெட்ரோல் நிரப்ப சென்றார்.
அப்போது, ஓசூர் பாலாஜி நகரை சேர்ந்த பிரபல ரவுடி ராதா என்ற ராதாகிருஷ்ணன் (47) தலைமையிலான கும்பல், மற்றொரு காரில், வினோத் காரை பின்தொடர்ந்து சென்று, அவரை கடத்தி சென்றனர். அவரிடம், 10 லட்சம் ரூபாய் கேட்டு அடித்து, உதைத்த கும்பல், வினோத்தின் செல்போனை பறித்தனர். மேலும் இண்டர்நெட் பேங்கிங் மூலம் பணம் உள்ளதா என பார்த்துள்ளனர். அதில் பணம் ஏதும் இல்லாததால் ஆத்திரமடைந்த கும்பல், வினோத்தை ஆயுதங்களால் கொலை செய்யும் நோக்கில் தாக்கியது.
அவர்களிடம் இருந்து தப்பிய வினோத், மத்திகிரி போலீசில் புகார் செய்தார். அதன்பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து, ரவுடி ராதாகிருஷ்ணனின் கூட்டாளிகளான ஓசூர் சென்னசந்திரம் காந்தி நகரை சேர்ந்த சாய்குமார், அருண் ஆகிய இருவரை கைது செய்தனர்.
இந்நிலையில் தலைமறைவாக இருந்த ராதாகிருஷ்ணனை நேற்று முன்தினம் போலீசார் கைது செய்தனர். அப்போது அவர் போலீசாரிடம் இருந்து தப்பி ஓட முயன்ற போது தவறி விழுந்தார். இதில் அவருக்கு காலில் எலும்பு முறிவு ஏற்பட்டது. இதனால் ராதாகிருஷ்ணன் சேலம் அரசு ஆஸ்பத்திரியில் சிகிச்சைக்காக சேர்க்கப்பட்டுள்ளார். அங்கு அவருக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.
கைதான ராதாகிருஷ்ணன் மீது பணத்திற்காக ஜான்பாஷா என்பவரை கடத்தி கொலை செய்த வழக்கு, கொலை முயற்சி, ஆள் கடத்தல், வழிப்பறி உள்பட பல்வேறு வழக்குகள் உள்ளன என்பது குறிப்பிடத்தக்கது.

Related Tags :
Next Story