மத்திய பல்கலைக்கழகத்தில் புதுவை மாணவர்களுக்கு 25 சதவீத இட ஒதுக்கீடு நாராயணசாமி வலியுறுத்தல்


மத்திய பல்கலைக்கழகத்தில் புதுவை மாணவர்களுக்கு 25 சதவீத இட ஒதுக்கீடு நாராயணசாமி வலியுறுத்தல்
x
தினத்தந்தி 1 March 2020 5:55 AM IST (Updated: 1 March 2020 5:55 AM IST)
t-max-icont-min-icon

மத்திய பல்கலைக்கழகத்தில் புதுவை மாணவர்களுக்கு 25 சதவீதம் இட ஒதுக்கீடு செய்ய துணை ஜனாதிபதியிடம் வலியுறுத்தியுள்ளதாக நாராயணசாமி தெரிவித்தார்.

புதுச்சேரி,

மத்திய அரசு பல்வேறு பிரச்சினைகளில் இருந்து மக்களை திசை திருப்ப குடியுரிமை திருத்த சட்டத்தை கொண்டு வந்துள்ளது. டெல்லியில் அமைதியான முறையில் போராட்டம் நடத்தியவர்கள் மீது தாக்குதல் நடத்தப்பட்டது கொடுமையான செயல் ஆகும்.

புதுவை பல்கலைக்கழகத்தில் அனைத்து துறைகளிலும் 25 சதவீத இடஒதுக்கீட்டை புதுச்சேரி மாணவர்களுக்கு வழங்க துணை ஜனாதிபதி வெங்கையா நாயுடுவிடம் கடிதம் கொடுத்துள்ளேன்.

புதுவையின் 4 பிராந்தியங்களிலும் ரூ.700 கோடியில் புதிய சுற்றுலா திட்டங்களுக்காக முதல்கட்ட நிதி ஒதுக்கி வேலைகள் நடந்துள்ளது. இரண்டாம் கட்டமாக ரூ.200 கோடியை ஒதுக்கிதரும்படி மத்திய சுற்றுலாத்துறை மந்திரியிடம் கேட்டுக்கொண்டுள்ளேன்.

துரிதசாலை திட்டம்

மத்திய மந்திரி நிதின் கட்காரியிடம் ரூ.130 கோடியில் மதகடிப்பட்டில் இருந்து புதுச்சேரி வரை 4 வழிச்சாலை அமைக்க வரைபடம் தயாரித்து கொடுத்துள்ளோம். இதில் சங்கராபரணி ஆற்றில் ஆரியபாளையத்தில் புதிய பாலம் கட்டுவதும் இடம்பெற்றுள்ளது. இப்பணி நடந்தால் வாகன நெரிசலை தவிர்க்க முடியும்.

குறிப்பாக முருங்கப்பாக்கம் பாலத்தில் இருந்து சிவாஜி கணேசன் சிலை வரை துரிதசாலை திட்டத்தை செயல் படுத்த கேட்டுக்கொண்டேன். இதற்கு ரூ.300 கோடி செலவு ஆகும்.

இவ்வாறு முதல்-அமைச்சர் நாராயணசாமி கூறினார்.

Next Story