மழை வேண்டி ஊரை காலி செய்து விட்டு திருப்பதிக்கு சென்ற கிராம மக்கள்
மழை வேண்டி ஊரை காலி செய்து விட்டு திருப்பதிக்கு சென்ற கிராம மக்கள்.
காவேரிப்பட்டணம்,
கிருஷ்ணகிரி மாவட்டம் காவேரிப்பட்டணம் செட்டிமாரம்பட்டி கிராமத்தில் மழை வேண்டி 5 ஆண்டுக்கு ஒரு முறை சுமார் ஆயிரத்துக்கும் மேற்பட்ட பொதுமக்கள் விரதமிருந்து பஸ்களில் திருப்பதி கோவிலுக்கு செல்வது வழக்கம். அதன்படி நேற்று முன்தினம் இரவு செட்டிமாரம்பட்டி கிராம மக்கள் ஊரை காலி செய்து விட்டு 15-க்கும் மேற்பட்ட பஸ்களில் திருப்பதிக்கு சென்றனர்.
முன்னதாக காவேரிப்பட்டணம் போலீஸ் நிலையத்தில் இது தொடர்பாக பாதுகாப்பு கோரி மனு அளித்தனர். இந்நிகழ்ச்சிக்கு ஊர் கவுண்டர் மாரியப்பன் தலைமை தாங்கி பக்தர்களை அழைத்து சென்றார். போலீஸ் இன்ஸ்பெக்டர் வெங்கடாசலம் கலந்துகொண்டு பொதுமக்களை கோவிலுக்கு வழியனுப்பி வைத்தார். அதேபோல் கிராம மக்களின் வேண்டுகோளை ஏற்று செட்டிமாரம்பட்டி கிராமத்தை சுற்றிலும் போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது. இரவு நேரங்களில் போலீசார் ரோந்து பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.

Related Tags :
Next Story