மோட்டார் சைக்கிள்கள் மோதல்: பர்னிச்சர் கடை ஊழியர் பலி


மோட்டார் சைக்கிள்கள் மோதல்: பர்னிச்சர் கடை ஊழியர் பலி
x
தினத்தந்தி 4 March 2020 3:00 AM IST (Updated: 4 March 2020 1:04 AM IST)
t-max-icont-min-icon

புதுக்கடை அருகே மோட்டார் சைக்கிள்கள் மோதிய விபத்தில் பர்னிச்சர் கடை ஊழியர் பலியானார். ஆட்டோவை முந்திச் செல்ல முயன்றபோது இந்த பரிதாப சம்பவம் நடந்துள்ளது.

புதுக்கடை,

புதுக்கடை அருகே குன்னத்தூர் பகுதியை சேர்ந்தவர் முருகன்(வயது 33). இவர் அப்பகுதியில் உள்ள ஒரு பர்னிச்சர் கடையில் ஊழியராக வேலை செய்து வந்தார்.

நேற்று முன்தினம் இரவு வேலை முடிந்து தனது மோட்டார் சைக்கிளில் மார்த்தாண்டத்தில் இருந்து தேங்காப்பட்டணம் செல்லும் சாலையில் சென்று கொண்டிருந்தார்.

அவர் குன்னத்தூர் சந்திப்பில் சென்றபோது, முன்னால் சென்று கொண்டிருந்த ஆட்டோவை முந்திச் செல்ல முயன்றார். அப்போது எதிரே வந்த மற்றொரு மோட்டார் சைக்கிள் முருகன் மீது மோதி விட்டு நிற்காமல் சென்றது. இதில் தூக்கி வீசப்பட்ட முருகனுக்கு தலையில் பலத்த காயம் ஏற்பட்டு சம்பவ இடத்திலேயே பரிதாபமாக இறந்தார்.

இதைகண்டு அதிர்ச்சி அடைந்த அப்பகுதி மக்கள் இதுபற்றி புதுக்கடை போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர். தகவல் அறிந்த சப்-இன்ஸ்பெக்டர் சுரே‌‌ஷ்குமார் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்று முருகனின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக குழித்துறை அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தார்.

இதுகுறித்து புதுக்கடை போலீசார் வழக்குப்பதிவு செய்து எதிரே வந்த மோட்டார் சைக்கிள் பற்றி விசாரணை நடந்தி வருகின்றனர்.

இறந்த முருகனுக்கு ஷோபா(27) என்ற மனைவியும், ஒரு மகனும், ஒரு மகளும் உள்ளனர்.


Next Story