மாவட்ட செய்திகள்

போச்சம்பள்ளி அருகே கோவிலில் பூட்டை உடைத்து திருட்டு + "||" + Loot at the temple near Pochampally

போச்சம்பள்ளி அருகே கோவிலில் பூட்டை உடைத்து திருட்டு

போச்சம்பள்ளி அருகே கோவிலில் பூட்டை உடைத்து திருட்டு
போச்சம்பள்ளி அருகே கோவிலில் பூட்டை உடைத்து பணம், பொருட்களை மர்ம நபர்கள் திருடிச்சென்றனர்.
மத்தூர்,

போச்சம்பள்ளி அருகே எம்.ஜி.அள்ளி ஊராட்சி தாதனூரில் பழமை வாய்ந்த ஸ்ரீ திம்மராய சாமி கோவில் உள்ளது. கடந்த ஒரு ஆண்டிற்கு முன்பு கும்பாபிஷேகம் நடந்தது. இந்த கோவிலின் பூசாரியாக கோவிந்தசாமி உள்ளார்.

நேற்று முன்தினம் இரவு இந்த கோவிலுக்குள் மர்ம நபர்கள் பூட்டை உடைத்து உள்ளே நுழைந்தனர். அவர்கள் கோவிலில் இருந்த வெண்கல குத்து விளக்கு 2, தொங்கும் விளக்கு 1, சாமிக்கு சாத்தப்பட்ட பட்டு புடவைகள், உண்டியல் பணம் ஆகியவற்றை திருடிச் சென்றனர்.


போலீசார் விசாரணை

இந்த நிலையில் நேற்று காலை வழக்கம் போல கோவிலுக்கு சென்ற பக்தர்கள் கோவிலில் திருட்டு நடந்திருப்பதை கண்டு அதிர்ச்சி அடைந்தனர்.

இது குறித்து கோவில் தர்மகர்த்தா கணேசன் போச்சம்பள்ளி போலீசில் புகார் செய்தார்.

அதன்பேரில் போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.

தொடர்புடைய செய்திகள்

1. பாபர் மசூதி இடிப்பு வழக்கில் தீர்ப்பு: நெல்லை ரெயில் நிலையம், கோவிலில் பலத்த பாதுகாப்பு
பாபர் மசூதி இடிப்பு வழக்கில் நேற்று தீர்ப்பு கூறப்பட்டதையொட்டி நெல்லை ரெயில் நிலையம், கோவிலில் பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டு இருந்தது.
2. திருப்பூரில் கடையில் செல்போன் திருடிய அண்ணன்-தம்பி கைது
திருப்பூர் போயம்பாளையம் அருகே கடையில் செல்போன் திருடிய அண்ணன்-தம்பியை போலீசார் கைது செய்தனர்.
3. தஞ்சை சமுத்திரம் ஏரியில் கட்டப்பட்ட ஆதிமாரியம்மன் கோவிலில் 90 சதவீத பகுதிகள் இடித்து அகற்றப்பட்டன
தஞ்சை சமுத்திரம் ஏரியில் கட்டப்பட்ட ஆதிமாரியம்மன கோவிலில் 90 சதவீத பகுதிகள் இடித்து அகற்றப்பட்டன. தற்கொலைக்கு முயன்றதாக இந்து முன்னணி நிர்வாகி மீது போலீசார் வழக்குப்பதிவு செய்தனர்.
4. சிறுவாச்சூரில் 2 வீடுகளில் 6¾ பவுன் நகை திருட்டு
சிறுவாச்சூரில் 2 வீடுகளில் 6¾ பவுன் நகைகளை திருடிய மர்மநபர்களை போலீசார் வலைவீசி தேடி வருகின்றனர்.
5. திருச்சியில் பல்வேறு பகுதிகளில் 6 மோட்டார் சைக்கிள், ஆட்டோ சக்கரங்கள் திருட்டு
திருச்சியில் ஆட்டோ சக்கரங்கள் மற்றும் 6 மோட்டார் சைக்கிள்கள் திருட்டுபோனதாக வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.

ஆசிரியரின் தேர்வுகள்...