கர்நாடகத்தில் யாருக்கும் கொரோனா வைரஸ் பாதிப்பு இல்லை சுகாதாரத்துறை மந்திரி ஸ்ரீராமுலு தகவல்


கர்நாடகத்தில் யாருக்கும் கொரோனா வைரஸ் பாதிப்பு இல்லை   சுகாதாரத்துறை மந்திரி ஸ்ரீராமுலு தகவல்
x
தினத்தந்தி 7 March 2020 4:15 AM IST (Updated: 7 March 2020 1:14 AM IST)
t-max-icont-min-icon

கர்நாடகத்தில் யாருக்கும் கொரோனா வைரஸ் பாதிப்பு இல்லை என்று சுகாதாரத்துறை மந்திரி ஸ்ரீராமுலு கூறினார்.

பெங்களூரு, 

கொரோனா வைரஸ் உலக நாடுகளை அச்சுறுத்தி வருகிறது. அந்த வைரசுக்கு இதுவரை 3 ஆயிரத்திற்கும் மேற்பட்டவர்கள் பலியாகியுள்ளனர். 1 லட்சத்திற்கும் மேற்பட்டவர்கள் அந்த வைரஸ் தாக்குதலுக்கு ஆளாகியுள்ளனர். இந்த வைரசால் இந்தியாவில் இதுவரை 31 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர்.

பெங்களூரு கம்ப்யூட்டர் என்ஜினீயர் ஒருவர் கொரோனா வைரஸ் தாக்குதலுக்கு ஆளாகியுள்ளார். அவர் தனது சொந்த ஊரான ஐதராபாத்தில் சிகிச்சை பெற்று வருகிறார்.

இந்த நிலையில் சுகாதாரத்துறை மந்திரி ஸ்ரீராமுலு தனது டுவிட்டரில் வெளியிட்டுள்ள பதிவில் கூறியிருப்ப தாவது:-

விழிப்புணர்வு

கர்நாடகத்தில் இதுவரை கொேரானா வைரஸ் பரவவில்லை. அது யாரையும் பாதிக்கவில்லை. பெங்களூரு மற்றும் மங்களூரு சர்வதேச விமான நிலையங்களில் வெளிநாடுகளில் இருந்து பயணிகள் மருத்துவ சோதனைக்கு உட்படுத்தப்படுகிறார்கள். கார்வார் துறைமுகத்திற்கு கப்பலில் வருபவர்களுக்கும் சோதனை நடத்தப்படுகிறது.

கர்நாடகத்தில் இதுவரை 72 ஆயிரத்து 542 பேருக்கு மருத்துவ சோதனை நடத்தப்பட்டுள்ளது. பெங்களூருவில் வணிக வளாகங்கள், கிளப்புகளின் நிர்வாகிகளுடன் கலந்து ஆலோசனை நடத்தி, கொரோனா வைரஸ் குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தும்படி உத்தரவிடப்பட்டு உள்ளது. கிராமங்களில் இதுகுறித்து விழிப்புணர்வு தகவல் பலகை வைக்கவும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.

இவ்வாறு மந்திரி ஸ்ரீராமுலு குறிப்பிட்டு உள்ளார்.

Next Story