மகளிர் தினத்தை முன்னிட்டு விழிப்புணர்வு ஊர்வலம்

குடியாத்தம் நகராட்சி சார்பில் உலக மகளிர் தினத்தை முன்னிட்டு விழிப்புணர்வு ஊர்வலம் நடைபெற்றது.
குடியாத்தம்,
விழிப்புணர்வு ஊர்வலத்தை நகராட்சி ஆணையாளர் எச்.ரமேஷ் தலைமை தாங்கி, கொடியசைத்து தொடங்கி வைத்தார். ஊர்வலத்தில் கலந்து கொண்டவர்கள், பெண்கள் பாதுகாப்பு, பெண் கல்வி, பெண் உரிமைகள் உள்ளிட்டவை குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் பதாகைகளை கையில் ஏந்திக்கொண்டு, முக்கிய வீதிகளின் வழியாக சென்றனர்.
ஊர்வலத்தில் பேரணாம்பட்டு நகராட்சி ஆணையாளர் நித்யானந்தம், நகராட்சி மேலாளர் ஜி.ஆர்.சூரியபிரகாஷ், சுகாதார அலுவலர் எம்.தமிழ்ச்செல்வன், நகரமைப்பு ஆய்வாளர் வெங்கடேசன் உள்பட பலர் கலந்துகொண்டனர்.
அதைத் தொடர்ந்து ராஜாஜி தெருவில் உள்ள நகர்ப்புற ஆரம்ப சுகாதார நிலையத்தில் துப்புரவு பெண் பணியாளர்களுக்கு மருத்துவ முகாம் நடைபெற்றது. இதில் ஏராளமான பெண் தொழிலாளர்கள் கலந்துகொண்டு மருத்துவ ஆலோசனை மற்றும் சிகிச்சை பெற்றனர்.
இதற்கான ஏற்பாடுகளை களப்பணி உதவியாளர் பிரபுதாஸ், தூய்மை பாரத திட்ட மேற்பார்வையாளர் ராஜேந்திரன் ஆகியோர் செய்திருந்தனர்.
Related Tags :
Next Story