பேராசிரியர் அன்பழகன் படத்துக்கு தி.மு.க.வினர் அஞ்சலி


பேராசிரியர் அன்பழகன் படத்துக்கு தி.மு.க.வினர் அஞ்சலி
x
தினத்தந்தி 7 March 2020 11:35 PM GMT (Updated: 2020-03-08T05:05:33+05:30)

பேராசிரியர் அன்பழகன் மறைவையொட்டி அவரது படத்துக்கு தி.மு.க.வினர் மலர் தூவி அஞ்சலி செலுத்தினர்.

புதுச்சேரி,

தி.மு.க. பொதுச்செயலாளர் பேராசிரியர் அன்பழகன் மரணமடைந்ததையொட்டி புதுவை லப்போர்த் வீதியில் உள்ள தெற்கு மாநில கட்சி அலுவலகம், அண்ணா சிலை ஆகிய இடங்களில் அவரது உருவப் படத்துக்கு தி.மு.க.வினர் நேற்று மலர் தூவி அஞ்சலி செலுத்தினர்.

நிகழ்ச்சியில் அமைச்சர் நமச்சிவாயம், தெற்கு மாநில தி.மு.க. அமைப்பாளர் சிவா எம்.எல்.ஏ., முன்னாள் எம்.பி. சி.பி.திருநாவுக்கரசு, துணை அமைப்பாளர்கள் அனிபால் கென்னடி, குணா.திலீபன், பொருளாளர் சண்.குமாரவேல், இளைஞர் அணி அமைப்பாளர் முகமது யூனுஸ், நிர்வாகிகள் தைரியநாதன், சக்திவேல், நடராஜன் உள்பட பலர் கலந்துகொண்டனர்.

வடக்கு மாநிலம்

வடக்கு மாநில கட்சி அலுவலகத்தில் தி.மு.க. அமைப்பாளர் எஸ்.பி.சிவக்குமார் தலைமையில் பேராசிரியர் அன்பழகன் உருவப்படத்துக்கு மலர் அஞ்சலி செலுத்தப்பட்டது.

இந்த நிகழ்ச்சியில் மாநில காங்கிரஸ் தலைவர் ஏ.வி.சுப்பிரமணியன், வெங்கடேசன் எம்.எல்.ஏ., பொருளாளர் வக்கீல் செந்தில்குமார் உள்பட பலர் கலந்துகொண்டனர்.

முத்தியால்பேட்டை

முத்தியால்பேட்டையில் பொதுக்குழு உறுப்பினர் பிரபாகரன் தலைமையில் அன்பழகன் உருவப்படத்துக்கு தி.மு.க. சார்பில் மலர் அஞ்சலி செலுத்தப்பட்டது.

நிகழ்ச்சியில் தொகுதி அவைத்தலைவர் தனகோடி, துணை செயலாளர் பலராமன், பொருளாளர் செல்வம், முன்னாள் இளைஞர் அணி அமைப்பாளர் சிவக்குமார், துணை அமைப்பாளர் செல்வம், மீனவர் அணி துணை அமைப்பாளர் பூபதி, கலை இலக்கிய அணி துணை அமைப்பாளர்கள் சேகர், சிவசக்தி, வேல்முருகன், சந்துரு, மாநில உதயநிதி ஸ்டாலின் மன்ற தலைவர் உத்தமன் உள்பட பலர் கலந்துகொண்டனர். 

Next Story