கூடங்குளம் அருகே கர்ப்பிணி தூக்கு போட்டு தற்கொலை


கூடங்குளம் அருகே கர்ப்பிணி தூக்கு போட்டு தற்கொலை
x
தினத்தந்தி 8 March 2020 10:00 PM GMT (Updated: 2020-03-08T20:23:50+05:30)

கூடங்குளம் அருகே கர்ப்பிணி தூக்கு போட்டு தற்கொலை செய்து கொண்டார்.

கூடங்குளம், 

கூடங்குளம் அருகே கர்ப்பிணி தூக்கு போட்டு தற்கொலை செய்து கொண்டார்.

கர்ப்பிணி 

நெல்லை மாவட்டம் கூடங்குளம் அருகே உள்ள ஆத்தங்கரைபள்ளி நாச்சியார் தெருவை சேர்ந்தவர் முகம்மது ராபி என்பவருடைய மனைவி ரஜப் நிஷா (வயது 23). இவர்களுக்கு திருமணம் முடிந்து 4 ஆண்டுகளுக்கு மேல் ஆகிறது.

இந்தநிலையில் ரஜப் நிஷா கர்ப்பிணியானார். இதையடுத்து அவருக்கு வளைகாப்பு நிகழ்ச்சி நடத்துவதற்கு ரஜப் நிஷா வீட்டார் ஏற்பாடு செய்துள்ளனர். ஆனால் அதனை முகம்மது ராபி வீட்டார் தட்டிக் கழித்ததாக கூறப்படுகிறது.

தூக்கு போட்டு தற்கொலை 

இதனால் மனம் உடைந்த ரஜப் நிஷா தனிமையில் அண்ணன் ஆதரவுடன் வசித்து வந்தார். இந்தநிலையில் வீட்டில் ரஜப் நிஷா தூக்கு போட்டு தற்கொலை செய்து கொண்டார். இதுகுறித்து கூடங்குளம் போலீசில் அவரது அண்ணன் கிதர் ஆலியா புகார் செய்தார்.

அதன் பேரில் போலீசார் சம்பவ இடத்துக்கு வந்து பார்வையிட்டனர். ரஜப் நிஷா உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக பாளையங்கோட்டை ஐகிரவுண்டு அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். வள்ளியூர் துணை போலீஸ் சூப்பிரண்டு ஹரிகிரண் பிரசாத் மேல் விசாரணை நடத்தி வருகிறார்.

Next Story