பண்ணை வீட்டில் துணிகரம்: தம்பதியை தாக்கி கட்டிப்போட்டு ரூ.13 லட்சம் நகை, பணம் கொள்ளை 20 பேர் கும்பல் அட்டூழியம்
சிக்கமகளூரு அருகே, தம்பதியை தாக்கி கட்டிப்போட்டு பண்ணை வீட்டில் ரூ.13 லட்சம் நகை, பணத்தை 20 பேர் கொண்ட கும்பல் கொள்ளையடித்து சென்ற சம்பவம் நடந்து உள்ளது.
சிக்கமகளூரு,
சிக்கமகளூரு மாவட்டம் கொப்பா தாலுகா குட்டேதொட்டா கிராமத்தை சேர்ந்தவர் விஜய ராகவன். விவசாயியான இவர் தனது மனைவி மஞ்சுளாவுடன் ஊருக்கு ஒதுக்குபுறமாக உள்ள பண்ணை வீட்டில் வசித்து வருகிறார். இந்த பண்ணை வீட்டில் ஜெயந்த் என்பவர் இரவு நேரத்தில் மட்டும் காவலாளியாக வேலை ெசய்து வருகிறார். இந்த நிலையில் நேற்று முன்தினம் இரவு விஜயராகவன் தனது மனைவி மஞ்சுளாவுடன் சாப்பிட்டுவிட்டு வீட்டில் தூங்கி கொண்டு இருந்தார். ஜெயந்த் வழக்கம்போல காவல் பணியில் ஈடுபட்டார்.
இந்த நிலையில் நேற்று அதிகாலை 2 மணியளவில் அந்த பண்ணை வீட்டிற்கு 2 கார்கள், ஒரு சரக்கு வேனில் 20 பேர் வந்தனர். அவர்கள் காவலில் ஈடுபட்டு இருந்த ஜெயந்தை பிடித்து சரமாரியாக தாக்கினார்கள். பின்னர் ஜெயந்தின் கால், கைகளை கட்டி போட்ட 20 பேர் கொண்ட கும்பல், அவர் வாயில் துணியை வைத்து திணித்தனர்.
இதையடுத்து விஜய ராகவனின் வீட்டின் கதவை அந்த 20 பேரும் சேர்ந்து பலமாக தட்டினார்கள். இதனால் விஜய ராகவனும், மஞ்சுளாவும் திடுக்கிட்டு எழுந்தனர். ஏதோ வீபரீதம் நடக்க போகிறது என்பதை உணர்ந்த அவர்கள் கதவை திறக்கவில்லை. ஆனாலும் 20 பேரும் சேர்ந்து கதவை உடைத்து கொண்டு பண்ணை வீட்டிற்குள் புகுந்தனர்.
இந்த கொள்ளை சம்பவம் குறித்து நேற்று காலை அப்பகுதியில் வசித்து வருபவர்களுக்கு தெரியவந்தது. அவர்கள் உடனடியாக அங்கு சென்று விஜய ராகவன், மஞ்சுளா, ஜெயந்த் ஆகிய 3 பேரையும் மீட்டு சிகிச்சைக்காக ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். அங்கு அவர்களுக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.
இதுகுறித்து தகவல் அறிந்த ஜெயபுரா போலீசார் சம்பவம் நடந்த வீட்டிற்கு சென்று விசாரித்தனர். அப்போது தம்பதி, காவலாளியை தாக்கி ரூ.10 லட்சம் மதிப்பிலான தங்கநகைகள், ரூ.3 லட்சம் ரொக்கத்தை 20 பேர் கொண்ட மர்மகும்பல் கொள்ளையடித்து சென்றது தெரியவந்தது.
இதன்பின்னர் அங்கு வந்த மோப்ப நாய் சம்பவம் நடந்த பண்ணை வீட்டில் இருந்து சிறிது தூரம் ஓடி நின்றது. ஆனால் யாரையும் கவ்விப்பிடிக்கவில்லை. இதனை தொடர்ந்து அந்த வீட்டில் பதிவாகி இருந்த மர்மநபர்களின் கைரேகைகளை, கைரேகை நிபுணர்கள் உதவியுடன் போலீசார் பதிவு செய்து கொண்டனர். மேலும் அவற்றை ஆய்வுக்காக தடயவியல் ஆய்வு மையத்திற்கு அனுப்பி வைத்தனர். இந்த கொள்ளை சம்பவம் குறித்து விஜய ராகவன் அளித்த புகாரின்பேரில் ஜெயபுரா போலீசார் வழக்குப்பதிவு செய்து உள்ளனர். மேலும் கொள்ளையில் ஈடுபட்ட 20 பேர் கொண்ட கும்பலை போலீசார் வலைவீசி தேடிவருகின்றனர். இந்த கொள்ளையில் ஈடுபட்டவர்களை பிடிக்க சிக்கமகளூரு மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு ஹரீஷ்பாண்டே தலைமையில் தனிப்படையும் அமைக்கப்பட்டு உள்ளது.
தம்பதி உள்பட 3 பேரை தாக்கி பண்ணை வீட்டில் நகை, பணம் கொள்ளையடிக்கப்பட்ட சம்பவம் குட்டேதொட்டா கிராமத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

மேலும் வீட்டில் இருந்த விஜய ராகவனையும், மஞ்சுளாவையும் அந்த 20 பேரும் சேர்ந்து சரமாரியாக தாக்கினார்கள். பின்னர் அவர்கள் 2 பேரின் கை, கால்களையும் கட்டிப்போட்ட மர்மநபர்கள் வாயில் துணியை வைத்து திணித்தனர். பின்னர் வீட்டில் இருந்த பீரோவை திறந்த 20 பேரும் அதில் இருந்த நகை, பணம், 3 செல்போன்களை கொள்ளையடித்தனர். இதையடுத்து அங்கிருந்து 20 பேரும் தாங்கள் வந்த கார்கள், சரக்கு வேனில் தப்பித்து சென்று விட்டனர்.
இந்த கொள்ளை சம்பவம் குறித்து நேற்று காலை அப்பகுதியில் வசித்து வருபவர்களுக்கு தெரியவந்தது. அவர்கள் உடனடியாக அங்கு சென்று விஜய ராகவன், மஞ்சுளா, ஜெயந்த் ஆகிய 3 பேரையும் மீட்டு சிகிச்சைக்காக ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். அங்கு அவர்களுக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.
இதுகுறித்து தகவல் அறிந்த ஜெயபுரா போலீசார் சம்பவம் நடந்த வீட்டிற்கு சென்று விசாரித்தனர். அப்போது தம்பதி, காவலாளியை தாக்கி ரூ.10 லட்சம் மதிப்பிலான தங்கநகைகள், ரூ.3 லட்சம் ரொக்கத்தை 20 பேர் கொண்ட மர்மகும்பல் கொள்ளையடித்து சென்றது தெரியவந்தது.
இதன்பின்னர் அங்கு வந்த மோப்ப நாய் சம்பவம் நடந்த பண்ணை வீட்டில் இருந்து சிறிது தூரம் ஓடி நின்றது. ஆனால் யாரையும் கவ்விப்பிடிக்கவில்லை. இதனை தொடர்ந்து அந்த வீட்டில் பதிவாகி இருந்த மர்மநபர்களின் கைரேகைகளை, கைரேகை நிபுணர்கள் உதவியுடன் போலீசார் பதிவு செய்து கொண்டனர். மேலும் அவற்றை ஆய்வுக்காக தடயவியல் ஆய்வு மையத்திற்கு அனுப்பி வைத்தனர். இந்த கொள்ளை சம்பவம் குறித்து விஜய ராகவன் அளித்த புகாரின்பேரில் ஜெயபுரா போலீசார் வழக்குப்பதிவு செய்து உள்ளனர். மேலும் கொள்ளையில் ஈடுபட்ட 20 பேர் கொண்ட கும்பலை போலீசார் வலைவீசி தேடிவருகின்றனர். இந்த கொள்ளையில் ஈடுபட்டவர்களை பிடிக்க சிக்கமகளூரு மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு ஹரீஷ்பாண்டே தலைமையில் தனிப்படையும் அமைக்கப்பட்டு உள்ளது.
தம்பதி உள்பட 3 பேரை தாக்கி பண்ணை வீட்டில் நகை, பணம் கொள்ளையடிக்கப்பட்ட சம்பவம் குட்டேதொட்டா கிராமத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
Related Tags :
Next Story