பெண்கள் தாழ்வு மனப்பான்மையை கைவிட்டு சாதிக்க வேண்டும் சர்வதேச மகளிர் தின விழாவில் மந்திரி சசிகலா ஜோலே பேச்சு


பெண்கள் தாழ்வு மனப்பான்மையை கைவிட்டு சாதிக்க வேண்டும் சர்வதேச மகளிர் தின விழாவில் மந்திரி சசிகலா ஜோலே பேச்சு
x
தினத்தந்தி 8 March 2020 11:11 PM GMT (Updated: 2020-03-09T04:41:30+05:30)

பெண்கள் தாழ்வு மனப்பான்மையை கைவிட்டு சாதிக்க வேண்டும் என்று மந்திரி சசிகலா ஜோலே கூறினார்.

பெங்களூரு,

கர்நாடக அரசின் பெண்கள் மற்றும் குழந்தைகள் நலத்துறை சார்பில் சர்வதேச மகளிர் தின விழா பெங்களூருவில் உள்ள ரவீந்திர கலாஷேத்ராவில் நேற்று நடைபெற்றது. இதில் பெண்கள் மற்றும் குழந்தைகள் நலத்துறை மந்திரி சசிகலா ஜோலே கலந்து கொண்டு, பல்வேறு துறைகளில் சாதனை படைத்த பெண்களுக்கு ராணிசென்னம்மா விருது வழங்கி பேசியதாவது:-

கர்நாடகத்தில் குழந்தைகளுக்கு என்று தனி பட்ஜெட் தாக்கல் செய்யப்பட்டுள்ளது. அவற்றை மக்கள் பயன்படுத்திக் கொள்ள வேண்டும். கிராமப்புறங்களில் பெண் குழந்தை பிறந்தால், அது பெற்றோருக்கு சுமை என்ற மனப்பான்மை மக்களிடையே உள்ளது. இந்த நிலை மாற வேண்டும். ஏனென்றால் தற்போதைய சூழ்நிலையில் பெண்கள் அனைத்து துறைகளிலும் சாதனை படைத்து வருகிறார்கள்.

சமூகம் மாறி வருகிறது. போஷன் திட்டத்தில் வழங்கப்படும் உணவுகளை குழந்தைகள் உட்கொண்டால், நல்ல ஊட்டச்சத்துடன் வளர்வார்கள். சமுதாயத்தில் பெண் குழந்தைகளுக்கு உயர்ந்த இடம் உள்ளது. அதில் எந்த குறையும் இல்லை. நாடு வளர்ச்சி அடைந்துள்ளது. பெண்கள் தாழ்வு மனப்பான்மையை கைவிட்டு சாதிக்க வேண்டும். 12-வது நூற்றாண்டிலேயே பெண்களுக்கு சம உரிமை வழங்கப்பட்டது. இவ்வாறு சசிகலா ஜோலே பேசினார்.

இந்த விழாவில் பெண்கள் மற்றும் குழந்தைகள் நலத்துறை முதன்மை செயலாளர் ராகேஷ்சிங் உள்பட பலர் கலந்து கொண்டனர். விழாவில் சிறப்பாக செயல்பட்டு வரும் மகளிர் சுயஉதவி குழுக்களுக்கு விருது வழங்கப்பட்டது.

Next Story